Tuesday, January 27, 2015

அனிருத்தின் காதலர் தின பரிசு

அனிருத் இசையமைத்து வரும் புதிய படம் ‘ஆக்கோ’. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஷாம் குமார் இயக்கி வருகிறார். தீபன் பூபதி, ரதீஷ் வேலு ஆகியோர் ரெபெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் விளம்பரங்கள் பெரும்பாலும் அனிருத்தை மையப்படுத்தியே வெளியாகி வருகின்றன. இப்படத்தின் கதையை கேட்டு மிகவும் வியந்த அனிருத், இந்த படத்திற்காக மிகச் சிறந்த பாடல்களை இசையமைத்துக் கொடுத்துள்ளார். 

இப்படத்தில் இவருடைய இசையில் அமைந்துள்ள ‘எனக்கென யாருமில்லையா’ என்ற சிங்கிள் பாடலை வரும் காதலர் தின பரிசாக அனிருத் வெளியிடவுள்ளார். இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் அவரது இதயத்துக்கு அருகில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் ‘ஆக்கோ’ படத்தின் கதை ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சிவா ஜி.ஆர்.என் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். சென்ற வருடமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் இந்த வருடத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment