கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், டைம் பாசுக்காக அணியை குறை கூறிக்கொண்டும் வீரர்களை சாடிக்கொண்டும் இருப்பார்கள். யாரும் ஏற்காவிட்டாலும் தங்களது ஆலோசனைகளையும் சொல்வார்கள்.
அதுபோல் சினிமாவில் யாரும் இல்லை. அந்த குறையை போக்கி வருகிறார் ராம்கோபால் வர்மா. அவரது சர்ச்சை கருத்தில் லேட்டஸ்ட்டாக சிக்கி இருப்பவர் சிரஞ்சீவி.
தனது 150வது படத்தில் நடிக்க தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி திட்டமிட்டிருக்கிறார். இப்படத்தின் இயக்குனர் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
ஷங்கர் மற்றும் வேறுசில பிரபல இயக்குனர்களிடம் இது பற்றி பேசி வருகிறார் சிரஞ்சீவி. இந்நிலையில் சிரஞ்சீவியின் 150வது படத்தை எந்த இயக்குனர் இயக்கினாலும் நன்றாக இருக்காது என தாக்குதல் தொடுத்திருக்கிறார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.
இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியது:
சிரஞ்சீவி தனது 150வது படத்தை எந்த இயக்குனரிடம் ஒப்படைப்பது என்று யோசித்து வருகிறார். அவர் படத்தை எந்த இயக்குனர் இயக்கினாலும் அது சாதாரண படமாகவே இருக்கும்.
அதில் எந்த சிறப்பும் இருக்காது. இப்படத்தை சிரஞ்சீவியே இயக்குவதுதான் பொருத்தமாக இருக்கும். இது பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும். இந்த முடிவை எடுக்காமல் வேறு யாரிடமாவது படத்தின் இயக்குனர் பொறுப்பை ஒப்படைத்தால் அது மிகப்பெரிய தவறாகிவிடும்.
பிரஜா ராஜ்யம் கட்சியை தொடங்கியதைவிட அது பெரிய தவறாக இருக்கும்.இவ்வாறு வர்மா கூறியிருப்பது தெலுங்கு படவுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி சிரஞ்சீவி கருத்து எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார்.

No comments:
Post a Comment