முன்னாள் மத்தியமந்திரி தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
என் மீது கூறப்பட்ட தொலைபேசி இணைப்பு தொடர்பான குற்றச்சாட்டுக்கு தெளிவான விளக்கம் தந்துள்ளேன். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் உரிய பதில் அளித்துள்ளேன். இதற்கு பின்னரும், இது குறித்து முனை முறிந்த கேள்வி அம்புகளை தொடுத்து தனது அரைவேக்காட்டுத் தனத்தை வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டிருக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி.
‘‘என் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று கூறினாரே தயாநிதிமாறன் ஏன் தொடரவில்லை’’. ‘‘இந்த விவகாரம் குறித்து நேரடி விவாதத்துக்கு தயாரா?’’ என்றெல்லாம் கேட்டிருக்கிறார். எப்.ஐ.ஆர். போடப்பட்ட நிலையில்-அதனை நீதிமன்றத்தில் சந்தித்து நிரபராதி என்று நிரூபித்து விட்டு வரும் வரையில் மான நஷ்ட வழக்கு தொடருவது பயன் தராது என்பது சராசரி அறிவு படைத்தவருக்கும் தெரியும். அதி மேதாவி ஆடிட்டருக்கு அது புரியாமல் போனது ஏனோ?.
அடுத்து இது குறித்து நேரடி விவாதத்துக்கு தயாரா? என்று கேட்டிருக்கிறார். குருமூர்த்தியின் அறை கூவலை நான் ஏற்க தயார்?. அதற்கு முன் அவர் எனது இரண்டு கேள்விகளுக்கு சரியான விளக்கம் தந்து விட்டு நேரமும், இடமும் குறிப்பிடட்டும். அவரை சந்தித்து விவாதிக்க தயாராக இருக்கிறேன்.
முதலாவதாக ஒரு ஐ.எஸ். டி.என். பி.ஆர்.ஐ. இணைப்பின் மூலம் ஒரே சமயத்தில் அவர் குறிப்பிடுவது போல முன்னூறு தொலைபேசி எண்களை இயக்கி காட்டுவாரா?. அந்த முன்னூறு எண்களையும் ஒரே நேரத்தில் இயக்க சாத்தியக்கூறு இருப்பதாக அவர் நிரூபித்துக் காட்டினால், நான் அரசியலை விட்டே விலகி கொள்கிறேன்.
இரண்டாவதாக, அவர் குறிப்பிடுவது போல 400 கோடி ரூபாய்க்கு மேல் தொலைபேசி உபயோகித்திருந்தால், டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் உள்ள, அதற் கான மீட்டர் ஓடியிருக்கும் அல்லவா? அப்படி அவர் குறிப்பிட்டுள்ள, அதாவது அவர் கூறுவது போல, நான் உபயோகப்படுத்திய தொலைபேசி எண்ணின், ‘மீட்டர் ரீடிங்கை’ அவர் காட்டட்டும். இந்த இரண்டையும் அவர் நிரூபித்துவிட்டு, தேதியும், இடமும் அவர் குறிப்பிடட்டும். நான் சந்திக்க தயாராக இருக்கிறேன்!
எட்டு ஆண்டு காலமாக பல்வேறு விதங்களில் முயற்சி செய்து, ஏன் தொலைபேசி துறையின் விஜிலன்ஸ் துறையும் கூட இந்த குற்றச்சாட்டு குறித்து ஆராய்ந்து, அறிக்கை கொடுத்த பின்னும், குருமூர்த்தி குறிப்பிடும் 400 கோடி ரூபாய் இழப்பு என்பது அபத்தமான பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் சி.பி.ஐ. பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தி விட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்.) உறுதி செய்துள்ளது.
சி.பி.ஐ. கூட தனது எப்.ஐ.ஆரில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் இழப்பு இருக்க கூடும் என்று குறிப்பிட்டு விட்டு, அதற்கும் ஆதாரங்களை தேடி அலையும் நிலையில், இன்னமும் ஆடிட்டர் குருமூர்த்தி மீண்டும், மீண்டும் தான் கூறிய பொய்யை உண்மையாக்க வேண்டும் என்று ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பதை நிறுத்துவது நலம்.
இவ்வாறு அறிக்கையில் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment