நாட்டின் 66–வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் 21 குண்டுகள் முழங்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடியை ஏற்றினார். இதையொட்டி நடைபெற்ற கண்கவர் அணிவகுப்பை பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, மிச்செல் ஆகியோர் பார்வையிட்டனர். இந்தியாவின் ராணுவ வலிமையையும், கலாசார பெருமையையும் பறைசாற்றும் விதத்தில் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன.
எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், ஓடும் மோட்டார் சைக்கிள்களில் மனித பிரமிடு போல நின்று காண்போரை வியப்பில் ஆழ்த்தினர். அவர்களை ஒபாமா கட்டை விரலை உயர்த்திக் காண்பித்து உற்சாகப்படுத்தினார். குடியரசு தினவிழாவில் இந்திய முப்படைகளின் பலத்தை பறைசாற்றக்கூடிய அணிவகுப்பு மற்றும் நாட்டின் பன்முக கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இவற்றை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, தனது மனைவி மிச்செல்லுடன் மகிழ்வுடன் கண்டுகளித்தார்.
இந்த அணிவகுப்பில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய மோட்டார் சைக்கிள் சாகசம் பார்வையாளர்களை மட்டுமின்றி ஒபாமாவையும் மிகவும் கவர்ந்தது. பக்கவாட்டு ஓட்டுதல், ஏணி சாகசம், மயில் மற்றும் தாமரை வடிவங்களில் ஓட்டுதல், கொடி அணிவகுப்பு என பல்வேறு சாகசங்களை மோட்டார் சைக்கிள்களில் எல்லை பாதுகாப்பு படையினர் நிகழ்த்திக்காட்டினர். இந்த சாகசங்களை மிகவும் ரசித்த ஒபாமா, தனது கட்டை விரலை உயர்த்தி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
மேலும் இந்திய விமானப்படையின் 31 விமான அணிவகுப்பு, 27 விமான அணிவகுப்பு போன்றவையும் அனைவரையும் ஈர்த்தது. இதில் இந்திய, அமெரிக்க, ரஷிய விமானங்கள் கலந்திருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பெண் அதிகாரிகள் மட்டுமே இதுவரை பங்கேற்று உள்ளனர். வரலாற்றிலேயே முதன் முறையாக முப்படைகளை சேர்ந்த பெண்கள் அணியினர் நேற்று அணிவகுப்பில் கலந்து கொண்டனர். அதன்படி தரைப்படை, விமானப்படை, கடற்படையை சேர்ந்த தலா 148 வீராங்கனைகளை கொண்ட பிரிவுகள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டன.

No comments:
Post a Comment