பிரபல மலையாள நடிகர் மோகன்லால் சினிமாவில் பல்வேறு வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குறிப்பாக அவர் தேசப்பற்று, தேச ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் ராணுவ அதிகாரி வேடங்களிலும் நடித்து இந்திய ராணுவத்திற்கு பெருமை சேர்த்து உள்ளார்.
இதை கவுரவிக்கும் வகையில் அவருக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் ஜெனரல் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ராணுவ அணி வகுப்புகள், ராணுவம் சம்பந்தமான பயிற்சிகளிலும் அவர் அடிக்கடி பங்கேற்பது வழக்கம். நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த இந்திய குடியரசு தினவிழாவில் ராணுவ சீருடையில் மோகன்லால் தனது மனைவி சித்ராவுடன் பங்கேற்றார். இந்த அனுபவம் பற்றி மோகன்லால் கூறியதாவது:–
குடியரசு தினவிழாவில் நான் பங்கேற்றதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன். இதில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பங்கேற்றது சிறப்பு வாய்ந்தது. ஒபாமா இந்தியா வந்தது நமது நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நாட்டிலேயே மதிப்பு வாய்ந்த முக்கிய பதவி ராணுவ பதவி தான்.
ராணுவம்தான் நாட்டின் தலையெழுத்து. அப்படிப்பட்ட ராணுவத்தில் நான் இடம் பெற்றிருப்பதை பெருமையாக கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment