ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்காக அதிமுக தேர்தல் பணிக்குழுவில் உள்ள 30 அமைச்சர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட 50 பேரும் திருச்சி வந்தனர். இருப்பினும் இடையிடையே சொந்த ஊர் மற்றும் சென்னைக்கு சென்று வந்தனர். இனி யாரும் சென்னைக்கோ, சொந்த ஊருக்கோ போகக் கூடாது அனைவரும் தேர்தல் பணியை மட்டுமே கவனிக்க வேண்டும் என கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 6 வார்டுகளை கவனிக்கும் அமைச்சர்கள் மட்டும் ஓட்டல்களில் தங்கிக்கொள்ளவும், மற்றவர்கள் அனைவரும் அந்தந்த பகுதியிலேயே தங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதிகள் அல்லது அருகில் உள்ள பகுதிகளில் காலியாக உள்ள வீடுகள் அமைச்சர்களுக்காக புக் செய்யப்பட்டுள்ளன.
20 நாட்கள் மட்டுமே விஐபிகள் தங்கக்கூடிய இந்த வீடுகள் ஏரியாவுக்கு தகுந்தாற்போல் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வாடகைக்கு பெறப்பட்டுள்ளன. பிரியாணி பொட்டலத்துடன் தலைக்கு ரூ.300 ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரின் பிரசாரத்துக்காக, அமைச்சர்கள் அவர்களின் சகாக்கள் என தெருவுக்கு ஒரு அலுவலகம், அதைச் சுற்றி 4 ஸ்கார்பியோ மற்றும் 4 இனோவா கார்கள் என பொதுமக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகின்றனர்.
அதிமுக வேட்பாளர் பிரசாரத்திற்கு செல்லும் போது உடன் வரும் தொண்டர்களுக்கும் ஒரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது என்பது தான் வேடிக்கை. வேட்பாளர் வளர்மதி நேற்று ஸ்ரீரங்கம் நகரில் உத்தரவீதி, கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கெ £ண்டார். ஜீப்பில் சென்ற அவருடன் நிர்வாகிகளும், முன்புறம் தொண்டர்களும் ஊர்வலமாக சென்றனர்.
மதிய உணவுக்கு வேட்பாளர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் காரில் ஏறி சென்றுவிட தொண்டர்கள் மற்றும் பிரசாரத்துக்காக வந்தவர்களுக்கு பண பட்டுவாடா செய்யப்பட்டது. பெரியவர்கள் அனைவருக்கும் பிரியாணி பொட்டலத்துடன் தலா ரூ.300, சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு தலா ரூ.100ம் வழங்கப்பட்டது. நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு பிரசாரத்திற்கு வரும் அனைவரும் மூலத்தோப்பு மற்றும் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதற்கென தனி ஏஜென்டுகள் உள்ளனர் என்றார்.
வேட்டி, சேலை பரிசு
ஸ்ரீரங்கம் தேர்தல் பிரசாரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களில் ஒருவருக்கு சோமரசம்பேட்டை பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருக்கும் அமைச்சர் நேற்று முன்தினம் இரவு தான் அந்த பகுதிக்கு வந்தார். முதற்கட்டமாக காரிலேயே அந்தப் பகுதியை சுற்றிப் பார்த்த அவர், அனைவருக்கும் ஒரு கிப்ட் என வீட்டுக்கு ஒரு வேஷ்டி, ஒரு சேலை கொடுத்திருக்கிறார்.

No comments:
Post a Comment