குடியரசு தின விழாவில், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, 'சல்யூட்' அடிக்காதது குறித்து சமூக வலை தளங்களில், பரபரப்பாக தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இது தொடர்பாக, துணை ஜனாதிபதி அலுவலக கூடுதல் செயலர் குர்தீப் சப்பல் வெளியிட்டுள்ள அறிக்கை:
'தேசிய கீதம் ஒலிக்கும்போது, சீருடை அணிந்தவர்கள் சல்யூட் அடிக்க வேண்டும்; சீருடை அணியாதவர்கள், அருகில் நிற்போர் அசையாமல் நிற்க வேண்டும்; சல்யூட் அடிக்க வேண்டிய அவசியமில்லை' என்பது, அரசு மரபு.இதன்படி, தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சல்யூட் அடித்தார். அவருக்கு பக்கத்தில், சாதாரண உடையில் இருந்த ஹமீத் அன்சாரி, அசையாமல் நின்று, மரபை பின்பற்றினார். இதில், அரசு மரபு எதுவும் மீறப்படவில்லை.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment