ஊடகம் மூலம் விளம்பரம் பெறவே ஜெயலலிதா வழக்கில் நீதிபதி குன்ஹா தண்டனை தந்துள்ளார் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் பசந்த்குமார் இறுதி வாதம் செய்தார். ஊடகங்களின் ஆதிக்கம் தற்போது அதிகம் உள்ளதே தண்டனை தர காரணம் எனவும் பசந்த்குமார் வாதிட்டார். ஆதாரங்கள் இல்லாமல் நீதிபதி குன்ஹா 4 பேருக்கும் தண்டனை தந்துள்ளதாக வாதம் செய்தார். இதற்கு நீதிபதி குமாரசாமி ஆதாரங்கள் இல்லாமலா ஆயிரம் பக்க தீர்ப்பை தர முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
ஊடகங்களை விமர்சிக்காமல் வாதம் செய்யுமாறு நீதிபதி குமாரசாமி அறிவுறுத்தினார். ஜெயலலிதா தரப்பு இறுதிவாதம் நேற்றுடன் முடிவடைந்ததால் சசிகலா தரப்பு இறுதிவாதம் இன்று தொடங்கியது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம்
அரசு ஊழியர்கள் பரிசுப் பெறுவதுதான் சட்டப்படி குற்றம் என்று சசிகலா வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால் ஜெயலலிதா உள்ளிட்டோர் அரசியல் தலைவர்கள் என்பதால் பரிசு பெறலாம் என்றும் பசந்த்குமார் வாதிட்டார். இதற்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று நீதிபதி குமாரசாமி கருத்து தெரிவித்தார்.
ஜெயலலிதாவுக்கு சசிகலா நண்பர் தானே தவிர பினாமி அல்ல என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். சசிகலா தரப்பு வழக்கறிஞர் பசந்த்குமார் கேரள உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment