* காலை 9.10 மணி: ஒபாமா வருகையையொட்டி, டெல்லி ஐதராபாத் இல்லம் பரபரப்பானது. பாதுகாப்பு குழுவினரும், மீடியாக்களும் தயாராகினர்.
* 9.25 மணி: ஒபாமாவை வரவேற்க பிரதமர் நரேந்திர மோடி, பாலம் விமானத்துக்கு வந்தார்.
* 9.40 மணி: ஒபாமாவின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் பாலம் விமான நிலையத்தில் தரை இறங்கியது.
* 9.50 மணி: ஒபாமாவை கட்டித்தழுவி கைகுலுக்கி வரவேற்றார் மோடி.
* 9.55 மணி: ஒபாமாவும், அவரது மனைவி மிச்செலும் விமான நிலையத்தில் இருந்து பீஸ்ட் காரில் ஏறி ஓட்டல் ஐடிசி மவுரியாவுக்கு புறப்பட்டனர்.
* 10.05 மணி: ஒபாமா மற்றும் அமெரிக்க குழுவினர் ஓட்டலை வந்தடைந்தனர்.
* பகல் 12.14 மணி: ஜனாதிபதி மாளிகைக்கு வந்த ஒபாமா மற்றும் மிச்செலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மோடி வரவேற்றனர்.
* 12.20 மணி: விமானப்படையின் பெண் அதிகாரியான விங் கமாண்டர் பூஜா தாக்கூர் தலைமையிலான முப்படையினரின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஒபாமா ஏற்றுக் கொண்டார்.
* 12.47 மணி: ராஜ்கட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஒபாமா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருக்கு நினைவுப்பரிசாக இராட்டை வழங்கப்பட்டது.
* 12.55 மணி: ராஜ்கட் தோட்டத்தில் அரச மர செடிகளை ஒபாமா நட்டார். டிவைட் இசன்ஹோவர், ஜார்ஜ் புஷ், பில் கிளன்டனுக்கு பிறகு காந்தி நினைவிடத்தில் செடி நடும் 4வது அமெரிக்க அதிபர் ஒபாமா ஆவார்.
* 1.16 மணி: ஐதராபாத் இல்லத்துக்கு வந்தார் ஒபாமா.
* 1.30 மணி: மோடியும், ஒபாமாஒபாமா இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியது. அணுசக்தி ஒப்பந்தம், பாதுகாப்பு, தட்பவெப்ப மாற்றம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசினர்.
* 2.40 மணி: இருநாட்டு பிரதிநிதிகளுடன், மோடி, ஒபாமா இணைந்து மதிய உணவு சாப்பிட்டனர்.
* 3.00 மணி: மதிய உணவுக்கு பிறகு இரு நாட்டு தலைவர்களும் ஐதராபாத் இல்ல பூங்காவில் தனிமையில் பேசினர்.
* 3.05 மணி: ஒபாமாவுக்கு மோடி டீ கலந்து கொடுத்தார்.
* 4.48 மணி: இரு நாட்டு தலைவர்களும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.
* 5.01 மணி: மோடி பேசிய பிறகு ஒபாமா, ‘மேரா பியார் பாரா நமஸ்கார்’ என இந்தியில் வணக்கம் கூறி பேச்சை தொடங்கினார்.
* 5.30 மணி: இறுதியில், ‘சலேயின் சாத் சாத்’ (நாம் ஒன்றாய் முன்னேறி செல்வோம்‘ என இந்தியில் கூறி தனது பேச்சை நிறைவு செய்தார் ஒபாமா.
* 5.35 மணி: செய்தியாளர்களுடனான சந்திப்பு முடிந்து மீண்டும் ஓட்டலுக்கு சென்றார் ஒபாமா.
* 6.50 மணி: பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் நேரடியாக, உடனுக்குடன் தொடர்பு கொள்ள வசதியாக, மோடிஒபாமா இடையே ‘ஹாட்லைன்’ இணைப்பை ஏற்படுத்த முடிவு செய்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
* இரவு 7.45 மணி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அளித்த சிறப்பு இரவு விருந்தில் பங்கேற்பதற்காக ஒபாமா, மிச்செல் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி மாளிகைக்கு வந்தனர்.
* 8.10 மணி: இரவு விருந்து பராமாரிக்கப்பட்டது. பிரதமர் மோடி, பாஜ மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உட்பட 250 பேர் விருந்தில் பங்கேற்றனர்.
* 9.45 மணி: விருந்து முடிந்ததும் ஒபாமா, மிச்செல் உள்ளிட்டோர் விடைபெற்று ஓட்டலுக்கு திரும்பினர். இத்துடன் ஒபாமாவின் முதல் நாள் பயணம் நிறைவடைந்தது. இன்று காலை டெல்லி ராஜபாதையில் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் அவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளார்.
No comments:
Post a Comment