விஜய்யை ஹீரோவாக்க நான் முயன்ற நேரத்தில் அவரை வைத்து படமெடுக்க யாருமே தயாராக இல்லை.
அதனால்தான் அவருக்காக சொந்தமாக படம் தயாரித்து இயக்கினேன், என்றார் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன். எஸ் ஏ சந்திரசேகரன் நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் டூரிங் டாக்கீஸ்.
இந்தப் படத்தின் ட்ரலைர் வெளியீட்டு விழாவில் எஸ் ஏ சந்திரசேகரன் பேசுகையில், "நான் சினிமாவில் சான்ஸ் கேட்டு அலைந்த நாட்களில் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கியிருக்கிறேன்.
எழு நாட்கள் வெறும் தண்ணீரைக் குடித்து பசியைப் போக்கிக் கொண்டேன். பின்னர் இயக்குநராகி நிறைய வெற்றிப் படங்கள் கொடுத்த பிறகு, ஒரு கட்டத்தில் இனி இயக்க வேண்டாம்.. தயாரிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம் என நினைத்தேன்.
அப்போதுதான் என் மகன் விஜய் நாயகனாக ஆசைப்பட்டார். அவரை வைத்து இயக்குமாறு அன்றைக்கு முன்னணியில் இருந்த பல இயக்குநர்களையும் கேட்டுக் கொண்டேன். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்றுகூடச் சொன்னேன்.
ஆனால் ஒருவரும் அவரை வைத்து படமெடுக்க தயாராக இல்லை. எனவேதான் நானே அவரை வைத்து படம் தயாரித்து இயக்கினேன். இன்றைக்கு விஜய் பெரிய ஹீரோவாகிட்டார்.
நல்ல மருமகள், பேரக் குழந்தைகள், போதுமான வசதி, பணம் எல்லாமே இருக்கு. இனி நான் படம் இயக்கப் போவதில்லை. மாறாக, தயாரிப்பை மட்டும் தொடர்வேன். என் பேனர்ல புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்பு தருவேன்," என்றார்.

No comments:
Post a Comment