இலங்கையில் சிறுபான்மையின மக்களாக வாழும் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க பரிந்துரைக்கப்பட்ட 13-வது சட்ட திருத்தத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளதாகவும், இலக்கிடப்பட்டிருந்த கால வரம்புக்குள் இதனை அமல்படுத்த தொடர்ந்து அரசியல் கட்சிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று அறிவித்துள்ளார்.
இலங்கையின் தென்பகுதியான டெனியாயாவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ரணில் விக்ரமசிங்கே, இலங்கையை பிரிக்காமல் செய்யப்படும் அரசியல் தீர்வுக்கு தாங்கள் ஒப்புக் கொள்வதாக தமிழ் தேசிய கூட்டணி தெரிவித்துள்ள நிலையில் 13-வது சட்ட திருத்தத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்து வருகின்றன.
இலக்கிடப்பட்டிருந்த கால வரம்புக்குள் இதனை அமல்படுத்த தொடர்ந்து அரசியல் கட்சிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அனைத்து மாகாண சபைகளுக்கும் சமமான அதிகாரங்கள் அளிக்கப்படும் என தெரிவித்தார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்டு வரும் விசாரணை தொடர்பாக பேசிய அவர், இந்த பிரச்சனையை ராஜபக்சே அரசு தவறாக கையாண்டதன் எதிர்விளைவே இந்த விசாரணை என்றார்.
போர் முடிந்தவுடன் இது தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா.சபை பொதுச் செயலாளரிடம் அவர்கள் (ராஜபக்சே அரசு) ஒப்புக் கொண்டனர். பின்னர், ஐ.நா.சபை மனித உரிமைக் குழுவிலும் இதை உறுதிப்படுத்தினர். இதன் விளைவாகவே தற்போது இலங்கைக்குள் ஐ.நா.மனித உரிமைக் குழுவின் விசாரணை நடைபெற்று வருகிறது என்று விக்ரமசிங்கே கூறினார்.
எல்லா கிரிமினல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளும் உள்நாட்டு (இலங்கை) அரசு இயந்திரத்தின் மூலமாகவே நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் புதிய அரசின் நிலைப்பாடு எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

No comments:
Post a Comment