தற்போது எல்.சி.டி கணினி திரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மிகப் பெரும்பான்மையான கணினிகளில் டி.எப்.டி (TFT) எனப்படும் பழைய கணினி திரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.சில சமயம் இந்த திரைகள் படங்களை தெளிவாக காட்டுவது இல்லை. கணினி திரைகளில் பயன்படுத்தப்படும் அடிப்படை நிறங்களான நீலம், பச்சை, சிகப்பு ஆகியவற்றிலோ மற்ற நிறங்களிலோ பிரச்சனைகள் ஏற்படுவதே இதற்கு காரணம். திரையில் உள்ள ஒவ்வொரு பிக்சலும் இந்த மூன்று நிறங்களும் ஒன்றாக இணைவதால் உருவாகிறது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக, நிறங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டால், அதனை சம்பந்தப்பட்ட நிறுவனம் மாற்றி கொடுக்கும். நமது கணினி திரையில் உள்ள உள்ள நிறங்கள் சரியாக உள்ளதா இல்லையா என்பதை அறிவதற்கு ஒரு இணையத்தளம் உள்ளது.
அதற்கு நீங்கள் இந்த இணையத்தளத்திற்கு சென்று இந்த இணையத்தளம் வழங்கும் இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்து, திரையில் உள்ள பிரச்சனைகளை கண்டறியலாம். இந்த மென்பொருளை இயக்கும்போது ஒரு புதிய விண்டோ கிடைக்கும். அந்த விண்டோவில் அளிக்கப்பட்டு இருக்கும் வழிமுறைகளை பின்பற்றி, நமது கணினி திரை முழுக்க உள்ள நிறங்களை ஆய்வு செய்யலாம். அடிப்படை நிறங்கள் மட்டுமின்றி துணை நிறங்களையும் ஆய்வு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசதி மூலம் ஒவ்வொரு பிக்சல்களாக ஆய்வு செய்து இயங்காத நிறங்களை கண்டறியலாம்.
அதனை அடிப்படையாகக் கொண்டு திரையை மாற்றம் செய்யலாம்.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .
No comments:
Post a Comment