இமெயில் முகவரி வைத்திருப்பவர்களுக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை தங்களது பாஸ்வேடுகளை பாதுகாப்பது தான். நமது பாஸ்வேர்டு மற்றவர்களுக்கு தெரிந்து விட்டால் நமது இமெயில் முகவரியை பயன்படுத்தி பல வேண்டாத வேலைகளில் ஈடுப்படவும் வாய்ப்புள்ளது. ஆனால் நமது பாஸ்வேர்டு-ஐ திருட்டுத்தனமாக அறிந்து கொண்டு யாரோ நமது இமெயில் முகவரியை பயன்படுத்தி செய்யும் வில்லங்கமான வேலைகளுக்கு எல்லாம் நாம் தான் பொறுப்பேற்க வேண்டி வரும். எனவே தான் எல்லாவருமே தங்கள் பாஸ்வேர்டுகளை யாருக்கும் தெரியாத வண்ணம் ரகசியமாக வைத்திருப்பார்கள். நாம் நமது பாஸ்வேர்டுகளை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்று நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
இணயத்தளத்தை அடிப்படையாக கொண்ட 'பாஸ்வேர்டு மேலாளர்', 'கிளிப்பர்ஸ்', இதன் மூலம், ஜிமெயில், அமேஸான், ஈபே, போன்ற உங்களின் எந்த ஆன்லைன் அக்கவுண்டையும் ஒரே 'க்ளிக்' மூலம் 'லாகின்' செய்யலாம். பாதுகாப்பானது , ரகசியமானது, உங்களின் பிரவுசருடன் இணைத்துக்கொள்ளக் கூடியது. என்பதெல்லாம் 'கிளிப்பார்ஸ்'-ன் சிறப்பம்சங்கள்.
'கிளிப்பர்ஸ் டேட்டா'வின் ஒரு ஆப்லையின் காப்ப்பியை 'யுஎஸ்பி ஸ்டிக்'கில் செலுத்தி, எங்கிருந்தும் 'ஆக்சஸ்' செய்யலாம். இதற்கு நீங்கள் இங்கு சென்று ஒரு கிளிப்பர்ஸ் அக்கவுன்டைத் தொடங்குங்கள் .ஒரு கிளிப்பர்ஸ் அக்கவுண்டை தொடங்குவதற்கு தனிப்பட்ட விவரங்களோ, இமெயிலோ தேவை இல்லை. மேலும் விரைவான ஆசஸ் பெற 'கிளிப்பர்ஸ் பாஸ்வேர்டு மேனேஜர்'-ஐ 'பயர் பாக்ஸ்' சைடு பாரில் பொருத்திக்கொள்ளலாம்.
இன்னும் நமது பாஸ்வேர்டு-ன் பாதுகாப்பு பற்றிய கவலை இல்லாமல் இருக்கலாம்.
No comments:
Post a Comment