துபாய் கம்பெனி பரிசாக கொடுத்த ரூ. 17 கோடி பங்களாவுக்கு உடனடியாக வரி கட்ட வேண்டும் என்று கூறி நடிகர் ஷாருக்கானுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. துபாயில் உள்ளது நகீல் பப்ளிக் ஜாயின்ட் ஸ்டாக் கம்பெனி. இந்நிறுவனம் தங்களது வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொண்ட பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு நவீன வசதிகளுடன் கூடிய பங்களாவை பரிசாக அளித்தது. அதன் மதிப்பு ரூ.17.84 கோடி. இதுபற்றி வருமான வரி துறைக்கு ஷாருக் தெரிவிக்கவில்லை.
இதை கண்டுபிடித்த வருமான வரித்துறை ஷாருக்கானுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அதில் ரூ.17.84 கோடி மதிப்புள்ள பங்களாவுக்கு உடனடியாக வருமான வரி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு பதில் அளித்த ஷாருக்கான், ‘இந்த பங்களாவை வர்த்தகம் மூலமோ, தொழில் மூலமோ சம்பாதிக்கவில்லை. முழுக்க பரிசாக வந்தது.
இதற்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். இதை நகீல் நிறுவனமும் உறுதி செய்து வருமான வரி துறைக்கு கடிதம் அனுப்பியது. அதில் திருப்தி அடையாத வருமான வரித்துறை டிசம்பர் மாதம் மீண்டும் ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அதில், ‘நகீல் நிறுவனம் கடந்த 2004ம் ஆண்டு முதல் ஷாருக்கானின் பெயரை தங்கள் நிறுவன தயாரிப்பை விளம்பரப்படுத்த பயன்படுத்தி வருகிறது.
அதற்கு பணம்பெற்றதாக இதுவரை ஷாருக் எந்த ரசீதும் சமர்ப்பிக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட பங்களா வருமானமாகவே கருதப்படும். எனவே ரூ. 17.84 கோடிக்கான வரியை உடனடியாக அவர் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment