சன் பிக்சர்ஸ் சார்பில் 'எந்திரன் - பார்ட் 2' தயாரிப்பதற்கு இயக்குனர் ஷங்கரை அணுகியுள்ளனர்.
2010ம் ஆண்டில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படம் ரூ.130 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. அப்படத்தின் வர்த்தகமோ ரூ.300 கோடியைத் தொட்டதாக தெரிகிறது. எந்திரன் போலவே இன்னும் ஒரு படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டது, சன் பிக்சர்ஸ்.
இதையடுத்து, 'எந்திரன் - 2' பண்ணலாம் என்கிற முனைப்பில் இயக்குனர் ஷங்கரை அணுகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் என்ன முடிவெடுத்துள்ளார் என்பது குறித்த இன்னும் வெளியாகவில்லை.
ரஜினியிடமும் இது பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளது. ரஜினியும் அடுத்து எந்திரனை போன்று ஒரு மாபெரும் ஹிட் கொடுப்பதற்காக தான் யோசிந்து கொண்டு இருக்கிறார். அதனால் இந்த வெற்றி கூட்டணியின் எந்திரன் 2 திரைப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளி வரலாம் என்ப்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்திரன் வெளியாகி இன்று 100 நாள் ஆகியுள்ளது. அது மட்டுமல்லாது விருதுகளும் வர ஆரம்பாகி விட்டது எந்திரனுக்கு. மும்பையில் நடைபெற்ற ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள் வழங்கும் விழாவில் இரண்டு விருதுகளை 'ரோபோ' வென்றுள்ளது.
ஸ்ரீனிவாஸ் மோகனுக்கு சிறந்த Special Effects-க்கான விருது மற்றும் Special Jury விருதும் கிடைத்துள்ளது. விருதுகள் கிடைக்க ஆரம்பம் ஆகியுள்ளது. இந்த சூட்டோடு எந்திரன் 2 வை ஆரம்பிக்க நினைகிரதாம் சன் நிர்வாகம்.
No comments:
Post a Comment