ஒரு அப்பா, இரண்டு அம்மாக்கள். இதில் இரண்டாவது தாய்க்கு பிறந்தவர் விஷால். மூத்தவருக்கு பிறந்தவர் ஆர்யா என்று போகிறது கதை. பத்திரிகைகளும் மீடியாக்களும் முன்பே கிசுகிசுத்த மாதிரி விஷால் பெண்மை கலந்த தோற்றத்தில் நடிக்கிறார். உற்றார் உறவினர் நண்பர்கள் என்று போகிற இடத்திலெல்லாம் கேலியையும் கிண்டலையும் அனுபவிக்கும் விஷால், அடிக்கடி வீட்டின் மூலையில் குறுகுறு பார்வையோடு அமர்ந்திருப்பாராம்.
அப்படி ஒருநாள் அமர்ந்திருக்கும் போதுதான் அந்த சம்பவம் நடக்குமாம். வில்லனின் ஆட்கள் வீட்டிற்குள் புகுந்து அந்த வீட்டையை துவம்சம் செய்வார்களாம். அத்தனையையும் பார்த்துக் கொண்டு அமைதியாகவே இருப்பாராம் விஷால்.
நான் பெத்த ஒரு புள்ளையும் இப்படி பொட்டையா போச்சே. அது மட்டும் பொறந்தது மாதிரியே ஆம்பிளையாவும் வளர்ந்திருந்தா இப்படி ஆகியிருக்குமா என்று விஷாலின் அம்மா புலம்பியவாறு மயங்கி சாய, அப்படியே வெற்றுப் பார்வையோடு எழுந்து வெளியே வரும் விஷால், காட்டுத்தனமாக ஒரு ஃபைட் செய்வாராம். அப்புறமென்ன? வில்லன்களை புரட்டி எடுத்துவிட்டு அப்படியே பழைய மாதிரியே தனது இடத்தில் போய் அதே நிலைகுத்திய பார்வையோடு அவர் உட்கார்ந்து கொள்வாராம்.
இந்த காட்சி தியேட்டரில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தும் என்று இப்போதே சந்தோஷப்படுகிறது அவன் இவன் யூனிட்!
No comments:
Post a Comment