நாலு படத்தில் நடிக்கிற வரைக்கும்தான் கவலை. நடித்து முடித்துவிட்டால்? எல்லையில்லாமல் விரிந்து கிடக்கிறது விளம்பர ஏரியா. பொட்டு வைப்பதில் துவங்கி புடவை கட்டுகிற வரை எதையாவது செய்து காசு பார்த்துவிடுகிறார்கள் நடிகைகள்! (மார்க்கெட் போன நடிகர்கள்தான் ஐயோ பாவம். டாஸ்மார்க் பாரில் கூட அருகில் சேர்ப்பதில்லை யாரும்!)
அதுபோகட்டும்... இப்படிப்பட்ட சவுகர்யம் இருந்தும் அசினுக்கு வந்தது ஒரு சோதனை! நகை விளம்பரம், நட்டு விளம்பரம் என்று எதில் எதிலோ நடித்து துட்டு பார்க்கும் அசின், ஒரு விளம்பர அழைப்புக்கு மட்டும் செவி சாய்ப்பதில்லை. அந்த அழைப்பு புடவைக்கடை விளம்பரங்கள்.
நடிக்க வந்த புதிதில் ஒரு புடவைக்கடை விளம்பரத்தில் நடித்தார் அசின். அப்போது போடப்பட்ட அக்ரிமென்ட்டில் 'வேறு புடவை கடை விளம்பரத்தில் நடிக்கக் கூடாது' என்று எழுதப்பட்டிருந்ததாம். இந்த தடை எத்தனை மாதங்களுக்கு என்பதை குறிப்பிடாமலே இருந்ததாம் அந்த ஒப்பந்தம். அதையெல்லாம் சரியாக கவனிக்காத அசின் கையெழுத்துப் போட, இப்போது டாப் லெவலில் இருந்தாலும் புடவைக்கடை விளம்பரங்களில் நடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
அசின் புடவை கட்டுகிற விஷயத்தில் இத்தனை சதியா?
No comments:
Post a Comment