அரவாணிகளின் வலியையும் வாழ்வியலையும் சொல்லும் சினிமா நர்த்தகி. புன்னகைப் பூ கீதா தயாரிப்பில் ஜி.விஜயபத்மா இயக்கியிருக்கும் இப்படம் முடிவதற்கு முன்பே பலரையும் பேச வைத்தது. அதுவும் சென்சார் போர்டு அமைப்பினருக்கு செம குடைச்சல்!
எங்கும் கத்தரி வைக்க முடியாத இப்படத்திற்கு கருத்து ரீதியாக ஏ தருகிறோம் என்று கூறிவிட்டார்கள். படம் வந்தால் போதும் என்ற எண்ணத்தில் ஓ.கே என்றாராம் விஜயபத்மா. ஆனால் அதற்கு அரவாணிகள் சமூகம் ஒப்புக் கொள்ளவில்லை. சமுதாயத்தில் ஏற்கனவே எங்களை தப்பு தப்பா பார்க்கிறாங்க. இப்போ எங்களை பற்றி எடுக்கப்படும் இந்த படத்திற்கும் ஏ கொடுத்தால் அந்த பார்வை இன்னும் விஸ்தாரமாகும். அதனால் ஏ வை நீக்குங்கள் என்றார்கள் ஆவேசமாக!
எல்லாம் ஒரு வாரம்தான். பிரச்சனை மெல்ல ஓய்ந்த நிலையில் இரு தரப்பும் அமைதியாகிவிட்டது. இப்போது படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை குறிக்க வேண்டிய தருணம். கமல்ஹாசன் வந்தால் நன்றாக இருக்கும். அவரையே அழைக்கலாம் என்றார் விஜய பத்மா. படத்தின் தயாரிப்பாளர் கீதாவுக்கும் சம்மதம். முறைப்படி அழைத்திருக்கிறார்களாம். ஒருவேளை கமல் வராவிட்டால்?
கமல் வந்தால்தான் விழா. இல்லையென்றால் வெறும் விளம்பரத்தோடு பாடல்களை வெளியிட்டு விடலாம் என்கிறாராம் விஜயபத்மா. பக்த கோடிகளின் பிரார்த்தனையை நிறைவேற்றுவாரா கமல்?
No comments:
Post a Comment