4-வது ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் கடந்த 8 மற்றும் 9-ந்தேதிகளில் பெங்களூரில் நடந்தது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி விலைபோக வில்லை. 10 அணிகளுமே அவரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.
கடந்த 3 ஐ.பி.எல். போட்டியிலும் அவர் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடினார். அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விலை ரூ.1.8 கோடியாகும்.
ஏலத்துக்கு வெளியே கங்குலியை எடுக்க கொச்சி அணி முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் ஏலத்தில் விலை போகாத வீரர்கள் குறித்து வருகிற 4-ந்தேதி முடிவு செய்யப்படுகிறது.
இதற்காக ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டம் வருகிற 4-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் விலை போகாத வீரர்கள் குறித்து முடிவு செய்யப்படும். இதனால் கங்குலிக்கு இன் னும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இதேபோல வாசிம்ஜாபரும் இதே வாய்ப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் கொச்சி அணி கங்குலியை எடுக்கலாம் என்றும், அவரே அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதை படிச்சிட்டீங்களா...?
கலாசாரத்தை சீரழிக்கும் நடிகை அமலாபால்; இந்து மக்கள் கட்சி கண்டனம்
No comments:
Post a Comment