இந்தோனேஷியாவை சேர்ந்தவர் நஷ்ரில் இர்காம் (29). இவர் தென்கிழக்கு ஆசியாவின் பிரபல “ராக்” இசை பாடகர். இந்தோனேஷியா மட்டுமின்றி ஆசிய நாடுகளிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் இவர் டெலிவிஷன் பிரபல பெண்களுடன் “செக்ஸ்” உறவில் ஈடுபட்ட நிர்வாணபட வீடியோ காட்சிகள் அங்குள்ள இண்டர்நெட்டில் ஒளிபரப்பாயின. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்பட்டது. “செக்ஸ்” வீடியோவில் தோன்றுவது இந்தோனேஷியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கான சட்டம் கடந்த 2008-ம் ஆண்டு இயற்றப்பட்டது. ஆகவே நஷ்ரில் இர்காம் கைது செய்யப்பட்டார். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 3 1/2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
தீர்ப்பை கேட்கவும், அவரை பார்க்கும் ஆர்வத்திலும் அவரது ரசிகர்கள் ஏராளமானவர்கள் கோர்ட்டு முன்பு திரண்டிருந்தனர். தீர்ப்பை கேட்டதும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
“செக்ஸ்” காட்சிகளில் நடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் முட்டைகள், அழுகிய தக்காளியை வீச காத்திருந்தனர். ஆனால் போலீசார் பாதுகாப்பாக அவரை கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதற்கிடையே இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய போவதாக நஷ்ரில் இர்காமின் வக்கீல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment