“சிந்து சமவெளி” சர்ச்சை படத்தில் நடித்து பிரபலமானவர் அமலாபால்.அதில் மாமனாருடன் கள்ளக்காதல் வைத்திருப்பது போல் நடித்தார். அந்த கேரக்டரில் நடித்ததற்காக அமலா பாலுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. படத்தை எடுத்த இயக்குனர் சாமி வீடும் தாக்கப்பட்டது.
தற்போது அவர் நடித்த “மைனா” படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. “தெய்வ மகன்” படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப் பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த நிலையில் அமலா பால் அளித்த பேட்டியொன்றில் தன்னை கேளிக்கை பிரியை என்று கூறியுள்ளார்.
விருந்து கேளிக்கைகள் எனக்கு பிடித்தமானவை.வார இறுதி விருந்துக்காக காத்திருப்பது இல்லை. சந்தோஷமாக இருக்கும் போதெல்லாம் நண்பர்களை பார்ட்டிக்கு அழைத்து கொண்டாடுவேன். கேரளாவில் என்னை வீட்டில் பார்க்க முடியாது. நிறைய நேரம் நண்பர்களுடன் பார்ட்டிகளில் தான் இருப்பேன் என்றெல்லாம் அவர் பேட்டி அளித்துள்ளார்.
இதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி
இருப்பதாவது:-
நடிகை அமலாபாலுக்கு இந்திய கலாசாரத்துக்கு எதிராக நடப்பது வாடிக்கையாகி விட்டது. “சிந்து சமவெளி” படத்தில் சக நடிகைகள் நடிக்கத் துணியாத கேரக்டரில் நடித்தார். அப்போதே அவரை கண்டித்தோம்.இயக்குனர் தான் பொறுப்பு என நழுவினார்.
இப்போது மேற்கத்திய பழக்கமான “பார்ட்டி” என்ற கேளிக்கை இரவு கூத்துகளுக்கு ஆதரவாக பேசி கலாசார சீரழிவுக்கு வழி வகுத்துள்ளார். அவர் பேட்டி இளம்பெண்கள் மனதை மாசுபடுத்துவது போல் உள்ளது.
இவர் பார்ட்டிகளுக்கு போய் புரட்சி செய்யட்டும். அதை பகிரங்கமாக பேசி பண்பாட்டை சிதைக்க வேண்டாம். இனியும் இது போன்ற கருத்துக்களை வெளியிட்டால் தக்க பாடம் புகட்டுவோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதை படிச்சிட்டீங்களா...?
இப்போ என்ன பண்பாடு இங்கே இருக்குனு இப்படி கத்துறாங்க..............இவனுங்களே குடிச்சிட்டு ரோட்லே கிடக்குற பயல்வோ. இவிங்க பண்பாட்ட பத்தி பேசுறாங்க.
ReplyDelete