சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டன் பாளையத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவனை சந்திக்க வந்த நடிகர் சரவணன் நிருபரிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. ஜெயலலிதாவின் துணிச்சல் மற்றும் ஏழை மக்களுக்காக அவர் மட்டுமே குரல் கொடுத்து வருகிறார் என்பதால் தான் நான் அ.தி.மு.க.வில் இணைந்தேன்.
சின்ன வயதில் இருந்தே அ.தி.மு.க.வில் சேர வேண்டும் என்று நினைத்து இருந்தேன். தற்போது தான் அதற்கான நேரம் வந்து உள்ளது. ஒன்றரை கோடி உறுப் பினர்கள் உள்ள அ.தி. மு.க.வில் அடிப்படை உறுப்பினராக என்னை இணைத்துக் கொண்டது நான் செய்த மிகப்பெரிய பாக்கியம்.
நான் அ.தி.மு.க.வில் சேர்ந்த போது தேர்தலில் பிரசாரம் செய்வீர்களா என்று ஜெயலலிதா கேட்டார். பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்று அவரிடம் கூறினேன். அதன்படி கடந்த 10 நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். நான் செல்லும் இடம் எல்லாம் ஆட்சி மாற்றம் எப்போது வரும் என்று பெண்கள் ஆர்வமாக கேட்டு வருவதை பார்க்கிறேன்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக நான் நடிக்கும் பட சூட்டிங்குகளை தள்ளி வைத்து உள்ளேன். பா.ம.க.வின் நிலையை எண்ணி அவர்களது கட்சி யினரே வேதனைப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை நடந்து வருகிறது.
பாண்டி பஜார் போலீசார் பயன்படுத்தி வந்த வாக னத்தை கூட பாதுகாக்க முடியாத நிலை உள்ளது. அவர்களது வாகனத்தை திருடி உள்ளனர். அதை போலீசார் ஈரோடடில் போய் மீட்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. விலைவாசி விஷம் போல் ஏறி விட்டது. தேர்தலை முன்னிட்டு ரேஷனில் பொருட்களின் விலையை ரூ10 குறைத்து உள்ளனர்.
4.5 வருடம் ஆட்சி நடத்திய போது குறைக்காமல் இப்போது தேர்தலுக்காக குறைத்து இருக்கிறார்கள் என்று பொது மக்கள் நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் திரைப்படத்துறை மோசமான நிலையில் உள்ளது.அவர்களது கட்சியை சேர்ந்த பாக்கியராஜ் மற்றும் சுந்தர்.சி. போன்றவர்கள் கூட அவர்களது படத்தை வெளியிட முடியவில்லை.
சினிமாவில் மக்களை காக்க ஹீரோ வருவார். அது போல தமிழக மக்களை காப்பாற்றும் முதல் அமைச்சராக ஜெயலலிதா வருவார்.அவர் ஆட்சிககு வந்து விலை வாசி உயர்வை நிச்சயம் குறைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
வருகிற சட்டசபை தேர் தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்ட போது அப்படி திட்டம் எதுவும் இல்லை என்றும், இதில் ஜெயலலிதா கட்டளைப்படி செயல்படுவேன் என்றும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment