செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் கமல் ஹாஸனுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்பட்டு வந்தது.
இப்போது அதில் ஒரு மாற்றம். பாலிவுட்டில் இன்று ஹாட் ஹீரோயினாகத் திகழும் சோனாக்ஷி சின்ஹாவை கமலுக்கு ஜோடியாக்குகிறார்கள்.
இவர் சல்மான்கானுடன் நடித்த தபாங் பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மும்பை சென்ற செல்வராகவன், சோனாக்ஷிக்கு கதை சொல்லியிருக்கிறார். அவருக்கு ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்துவிட்டதால், நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
அக்ஷய் குமாருடன் இப்போது ஜோக்கர் என்ற படத்தில் நடிக்க வருகிறார் சோனாக்ஷி. இந்தப் படம் முடிந்ததும் கமல் படத்தில் நடிக்க வருகிறாராம். கமல் மகள் ஸ்ருதி ஹாஸனை விட வயதில் ஒரு வருடம் இளையவர் சோனாக்ஷி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியாகிறது கமல் - செல்வா கூட்டணியில் உருவாகும், இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம்.
படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது.

No comments:
Post a Comment