சில ஹீரோக்களை கடைத் தெருவில் பஸ் ஸ்டாண்டுகளில் கண்டெடுப்பார்கள் இயக்குனர்கள். படம் வெளியான பின்பு படத்தை பார்க்கும் ரசிகர்கள், "திரும்பவும் ஹீரோவை அங்கேயே கொண்டு போய் விட்டுருங்கய்யா" என்று கெஞ்சாத குறையாக வெளியேறுவார்கள்.
பொதுவாக சினிமாவில் நடிக்க வரும் நடிகர், நடிகைகளில் சில பேர் தான் நிலைத்து நிற்கிறார்கள். சிலர் ஒன்றிரண்டு படங்களிலேயே காணாமல் போய்விடுகின்றனர். அதேநிலைமை தான் நடிகை ஸ்வாதியின் நிலை.
அதே நிலைமைதான் சுப்ரமணியபுரம் ஸ்வாதிக்கும். தன் கோழிமுட்டை கண்களால் ரசிகர்களை திணற வைத்த அந்த அல்டிமேட் அழகியை டைரக்டர் சசிகுமார் கண்டெடுத்தது டிவி நிகழ்ச்சி ஒன்றை பார்த்துதான். கேரள சேனல் ஒன்றில் ஏதோ ஒரு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தவர் இந்த ஸ்வாதி. தமிழில் சுப்ரமணியபுரம் வெளியானதும் ஏகப்பட்ட அழைப்புகள் வந்தது இவருக்கு. கதை பிடிச்சிருக்கணும். கைநிறைய சம்பளம் வேணும். முன்னணி ஹீரோக்களுடன்தான் நடிப்பேன் என்ற பற்பல கண்டிஷன்களை போட்டு தன்னைத் தேடி வந்த அழைப்புகளை எல்லாம் விரட்டி அடித்தார் ஸ்வாதி.
இப்போ என்ன பண்றாராம்?
வேறென்ன பண்ணுவார். மலையாளத்தில் ஏதோ டி.வி.ஷோ பண்றாராம்
No comments:
Post a Comment