மீனவர்களுக்கு ஆதரவாக நாகப்பட்டினத்தில் திட்டமிடப்பட்டிருந்த விஜய் கலந்து கொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அத்துடன் மழை பெய்ததால், நிகழ்ச்சி தொடங்குவதில் தடங்கல் ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த ரசிகர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசார் தடியடி நடத்தினர். இந்தச் சூழ்நிலையை அறிந்த விஜய் கோபமடைந்தார். கடும் மழை பெய்துவருவதாலும் கூட்டம் நடக்கும் இடத்தில் இருந்து கண்டன கூட்டைத்தை ரத்து செய்து விட்டு விஜய் வெளியேறினார்.
பின்னர் என்ன நினைத்தார் என்று தெரிய வில்லை திடீரென மீண்டும் கூட்டத்திற்கு வந்தார். பின்னர் ரசிகர்கள் மத்தியில் பேச விஜய் வந்தார். மாலை 7 மணிக்கு பேச ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். முதலில் கொடுமைப்படுத்தினார்கள். பின்னர் துப்பாக்கியால் சுட்டனர். இப்போது ஜெயிலில் அடைக்கப்பட்டனர். தமிழக மீனவர்களை காக்க
போராடுவோம். இதற்கு அரசியல் சாயம் பூசவேண்டாம். மீனவர்கள் நலன் காக்க மத்திய மாநில அரசுக்கு ரசிகர்கள் தந்தி அனுப்ப வேண்டும். பிரதமர் வீட்டில் தந்திகள் குவிந்து இருக்க வேண்டும் என்றார்.
பின்னர் அண்மையில் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயக்குமார், பாண்டியன் ஆகியோரின் குடும்பத்து:ககு நடிகர் விஜய் நிதி உதவி வழங்கினார்.
ஒருவேளை பேசுவதற்காக எழுதி கொண்டு வந்த வசனம் மறந்து போனதால் திரும்பி போய் படித்து விட்டு வந்தாரோ என்னமோ....!
நடிகர் தானே அப்படிதான் இருக்கும்.
ReplyDelete@கே. ஆர்.விஜயன்
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றிகள்...
அண்ணே..திரும்பி வந்தவர் ஒருவேளை 'டூப்பா' இருக்குமோ ...!?