பிரபாகாரனின் தாய், பார்வதியம்மாளின் மறைவுக்கு பத்திரிகையாளரும், பாடலாசிரியருமான நெல்லை பாரதி அஞ்சலி கவிதை ஒன்றை எழுதி பொதுமக்களுக்கு கொடுத்து வருகிறார்.
"வக்கற்ற தமிழனின் வீரவணக்கம்" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த கவிதை:-
சிகிச்சைக்காக வந்து நின்றாய்
கதவடைத்துக் கொண்டோம்
பால்கொடுத்த முலையறுத்த
பாவிகளாய் நின்றோம்
பாகிஸ்தான் குழந்தை வந்தால்
மருந்தளித்து மகிழ்ந்தது
பெற்றதாய்க்கு குணமளிக்க
தாயகமே பயந்தது
தமிழருக்காய் உயிர் கொடுத்தான்
நீ சுமந்த பிள்ளை -வீரத்
தாய்ப்பிணியைத் துடைத்துவிட
தமிழன் எவனும் இல்லை
ஆண்டவனும் ஆள்பவனும்
உன் குரலுக் கிரங்கல
நல்லவேளை உனது பாதம்
துரோக மண்ணில் இறங்கல
நோயும் உன்னைக் கொல்லவில்லை -எந்த
நாயும் உன்னைக் கொல்லவில்லை
மானங்கெட்ட தமிழர்கள்தான்
மரணத்தைப் பரிசளித்தோம்
பார்வதித்தாயே- இந்தப் பாவிகளை
ஆசீர்வதிப்பாயே
-நெல்லைபாரதி
anna nangal thalaivanai thernthedukkavillai maraaga thalaivaliyai therntheduthuvittoam athanal vai pesa unarvirunthum oomaikalai akkappattuvittom..........
ReplyDelete