பக்திப்பாடல் காட்சியை படமாக்கியபோது, சூட்டிங்கை பார்க்க வந்த பொதுமக்கள் சாமி ஆடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். கிராமப்புறங்களில் புகழ்பெற்ற கருப்பசாமி பாடல், ``அங்கே இடி முழங்குது...! இந்த பாடல் `உடும்பன் படத்தில் இடம்பெறுகிறது. பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு மானாமதுரை அருகில் உள்ள ஒரு கிராமத்தில், இரவு நேரத்தில் படமாக்கப்பட்டது. மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் திலீப் ரோஜர், கருப்பசாமி வேடம் போட்டு ஆடினார்.
சூட்டிங்கிற்காக போடப்பட்ட பாடல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஸ்பாட்டுக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் சாமி ஆடுவதை சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பது போன்று நிறுத்தப்பட்டனர். பாடல் வரிகளுக்கு ஏற்ப, நாயகன் திலீப் ரோஜர் உணர்ச்சி பொங்க கருப்பசாமி நடனம் ஆடினார். அதை பார்த்த பொதுமக்கள் சிலரும் சாமி அருள் வந்து சாமி ஆடினார்கள். இதனால் ஐந்து நாட்களில் முடிய வேண்டிய சூட்டிங், 8 நாட்களாக நடைபெற்றிருக்கிறது. ராம்ஜி எஸ்.பாலன் இயக்கும் இந்த படத்தை எஸ்.ஜெகநாதன் தயாரிக்கிறார்.

manamadurai pakkathula entha OOr nu therinja nallathu.
ReplyDelete