நடிகர் ஆதியுடன் நட்பாக பழகி வருகிறேன். அது காதலாக மாறுமா என்று இப்போது சொல்ல முடியாது, என்றார் நடிகை பூர்ணா.
'முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு' படத்தில் அறிமுகமாகி, அடுத்த அசின் என்ற செல்லப்பெயரையும் பெற்றவர் பூர்ணா. இவரும் கேரளாதான். ஆனால் அந்த படத்துக்குப் பிறகு பெரிய அளவில் பேசப்படவில்லை.
இப்போது அவரும், நடிகர் ஆதியும் இணைந்து நடித்த ஆடுபுலி படம் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இரண்டு பேரும் நெருக்கமாக பழகி வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதுகுறித்து பூர்ணாவிடம் கேட்டபோது, "ஆதி, ரொம்ப மென்மையானவர். எங்கள் இருவருக்கும் ஜோடிப்பொருத்தம் இருப்பதாகவும், ஆடுபுலி படத்தில் இருவரின் நடிப்பும் பிடித்து இருப்பதாகவும் படம் பார்த்த நிறைய பேர் கூறுகிறார்கள். சந்தோஷம்.
ஆதியுடன் நடிப்பதற்கு எனக்கு சவுகரியமாகவே இருந்தது. ஈரம் படத்தை பார்த்துவிட்டு, அவர் கூச்ச சுபாவம் கொண்டவராக இருப்பார் என்று நினைத்துவிட்டேன். ஆனால், அவர் அப்படி இல்லை. நகைச்சுவை உணர்வு கொண்டவர்.
ஆடுபுலி படப்பிடிப்பில் எப்போதும், தமாஷ் பண்ணிக்கொண்டிருப்பார். எங்கள் இருவரையும் பற்றிய கிசுகிசு என் காதுக்கும் வந்தது. அதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
நாங்கள் இருவரும் படம் பார்ப்பதற்காக தியேட்டருக்கும், ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்காக பார்லருக்கும் சேர்ந்து போவது உண்மைதான். இப்படி போவதால், எங்கள் இருவரையும் காதலர்கள் என்று சொல்ல முடியாது. எங்கள் இருவருக்கும் இடையே இருப்பது, நட்புதான். இது, காதலாக மாறுமா? என்று இப்போது சொல்ல முடியாது,'' என்றார்.

No comments:
Post a Comment