கிளாசிக் கம்பைன்ஸ் நிறுவனம் சார்பில் பி.சி.பிரதீப் தயாரிக்கும் படம் 'தென்காசி பக்கத்திலே'.சுபாஷ், விஷ்னுதேவ் ஆகிய இருவரும் ஹீரோக்களாக நடிக்க, அஸ்மிதா, அமுதா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.
'என் தங்கச்சி படிச்சவ', 'நல்ல காலம் பொறந்தாச்சு', 'பெரிய இடத்துப் பிள்ளை' உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதிய ஏ.ஆண்டனி இயக்கும் இப்படம் 1972ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டது. படத்தையும் அந்த வருடம் நடந்தது போன்றே பீரியட் படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
படத்தை பற்றி இயக்குநர் ஆண்டனி கூறுகையில், " உப்பைத் திண்ணவன் தண்ணீர் குடிச்சே ஆகனும், தப்பு செய்தவன் தண்டனை அடைந்தே தீரணும் என்ற கதைக் கருதான் மையக் கதை! காதலின் துவக்கமே காமத்தின் அடையாளம் தானோ? அதைத்தான் கதையாக கையாண்டுள்ளேன்.
ஜமீன் பரம்பரையில் நடப்பது போன்ற கதை! தங்களது குல கெளரவத்தைக் காபாற்றிக் கொள்ள ஒரு ஜமீன் பரம்பரைப் பெண் என்ன மாதிரியான முடிவெடுப்பாள் என்பதை கிராமிய மணத்துடன் படமாக்கி இருக்கிறேன். புதுமுகங்கள் அத்தனை பேருமே தங்கள் திறமையை நிரூபிக்க போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்." என்றார்.
இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் சென்னையில் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் குறுந்தகடை வெளியிட படக்குழுவினர் பெற்றுகொண்டனர்.

No comments:
Post a Comment