அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நடிகர் விஜயின் தந்தையான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் 3வது முறையாக நேற்றும் சந்தித்துப் பேசினார்.
நேற்று மாலை போயஸ் கார்டன் ஜெயலலிதாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசுக்கு எதிராக விஜயின் மக்கள் இயக்கம் வரும் 22ம் தேதி நாகப்பட்டிணத்தில் கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளதபு.
ஜெயலலிதாவுடனான சந்திப்பு குறித்து சந்திரசேகரன் கூறுகையில், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. நாகப்பட்டிணம் பொதுக் கூட்டத்துக்கு நாங்கள் தீவிரமாக தயாராகி வருகிறோம் என்றார்.
இந்தப் போராட்டத்துக்கு அதிமுகவின் ஆதரவை சந்திரசேகரன் கோரியதாகத் தெரிகிறது. அதே போல அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய விஜய்யை ஜெயலலிதா தரப்பு அழைத்ததாகவும் தெரிகிறது.

No comments:
Post a Comment