பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் மறைவு இசையுலகத்தை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அவரது இசைக்குடும்பத்தை சேர்ந்த பலரும் தங்கள் சோகத்தை பகிர்ந்து கொண்டார்கள். அவற்றிலிருந்து-
"மலேசியா வாசுதேவன் நல்ல பாடகர் மட்டுமல்ல, சிறந்த நடிகர் என்றும் பெயர் பெற்றவர். என் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்ட அவர் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.
மலேசியாவில் ஆண்டுதோறும் எனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். கடந்த ஆண்டு கோலாலம்பூரில் எனது பிறந்தநாள் விழா நடைபெறுவதாக தெரியவந்ததும், அந்த நிகழ்ச்சிக்கு தானே தலைமையேற்பதாகப் பெருந்தன்மையுடன் கூறினார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என்னை மனதாரப் பாராட்டினார். தொடக்க காலத்தில் என் பாடல்களைப் பாடித்தான் பிரபலமானதாகப் பல பேட்டிகளில் அவர் பெருந்தன்மையுடன் கூறியிருக்கிறார். என் பாடல்களைப் பாடி பயிற்சி பெற்று ஒரு அற்புதமான பாடகர் உருவானதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. நல்ல குரல் வளம் கொண்ட அவருக்குப் பலவிதமான பிரச்சினைகள் இருந்தன. சொந்தமாக ஒரு திரைப்படம் தயாரித்ததில் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்தாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். தங்களுடைய நாட்டிலிருந்து தமிழகம் சென்று மலேசியத் தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியவர் மலேசிய வாசுதேவன் என்று, மலேசியத் தமிழர்கள் பெருமையுடன் நினைத்துப் பூரித்துப் போயிருந்தனர். அப்படிப்பட்ட ஒரு கலைஞனை இழந்து தவிக்கும் மலேசியத் தமிழர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தென்னிந்திய நடிகர் சங்கமும், தமிழக அரசும் மலேசியா வாசுதேவனின் குடும்பத்தாருக்கு முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தச் செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. காரணம், ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் அவரும் நானும் சேர்ந்த சன் தொலைக்காட்சியில் வரும் சங்கீத மகா யுத்தம் நிகழ்ச்சியில் நடுவர்களாகப் பங்கேற்றோம். ரொம்ப உற்சாகமாக இருந்தார். பக்கவாதத்தால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக அவரால் நடக்க முடியவில்லை. எனவே தன்னை மேடையில் பாட வருமாறு அழைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். நிகழ்ச்சியில் பாடிய பாடகர்களைப் பற்றியும், பாடல்கள் குறித்தும் அருமையான கருத்துக்களைத் தெரிவித்தார். "என் பக்கத்தில் சாட்சாத் சரஸ்வதி தேவியே அமர்ந்திருக்கிறார். வாணிஜி ரொம்ப சிறந்த பாடகி" என்று அவர் என்னை வாழ்த்தியதை மறக்கவே முடியாது. அவருடன் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியைப் பற்றிய நினைவலைகள் என்றும் என் மனதில் நீடித்திருக்கும். பக்கவாதம் உள்ளிட்ட எந்த நோயும் அவரை எதுவும் செய்துவிட முடியாது என்று நம்பிக் கொண்டிருந்தேன். இந்த அதிர்ச்சியிலிருந்து நான் விடுபட பல காலம் ஆகும்.
மிகச் சிறந்த பாடகர் மட்டுமல்ல, பழகுவதற்கு நல்ல மனிதர் மலேசியா வாசுதேவன். கடந்த மாதம் பத்மபூஷன் விருது பெற்ற எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு, பாடகர் மனோ ஒரு பாராட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு வந்தபோது சற்று தடுமாறி நடந்தாரே தவிர, எல்லாரிடமும் தனக்கே உரிய உற்சாகத்துடன்தான் பேசினார். அந்த நிகழ்ச்சியில் அவருடன் பேச முடியவில்லை. வணக்கம் மட்டும் தெரிவித்தேன். அதற்கு முன்னதாக விஜய் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, "எப்படி இருக்கீங்கம்மா... குழந்தை, கணவர் எல்லாரும் நலமா இருக்காங்களா?" என்று பாசத்துடன் விசாரித்தார். அவரது மறைவு தமிழ் இசையுலகத்திற்கு பெரும் இழப்பு.
என்னை முதன் முதலாக சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றதே அவர்தான். 1986ம் ஆண்டு ஒருநாள் என்னைத் திடீரென்று தொடர்பு கொண்டு, சிங்கப்பூரில் நடக்கும் நிகழ்ச்சியில் நீங்களும் பாடப் போகிறீர்கள், தயாராக இருங்கள் என்றார். அவரைப் போன்ற சிறந்த பாடகர் கிடைப்பது அரிதிலும் அரிது. மிகவும் நட்பாகப் பேசிப் பழகுவர். சக கலைஞர்களை எந்தவிதமான தயக்கமும் இன்றி வெளிப்படையாகவும் மனதாரவும் பாராட்டக்கூடிய நல்ல மனிதர் அவர்.
மலேசியா வாசுதேவன் தோற்றத்தில் மட்டுமல்ல, அவரது குரலிலும் கம்பீரம் இருக்கும். அவரது பாடல்களை மிகவும் விரும்பிக் கேட்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். அவருடன் இணைந்து பாடியதில்லை என்றாலும், மூன்று நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் பங்கேற்றுள்ளோம். ஒருமுறையி புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அவருடன் சென்றிருந்தேன். நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அவரும் நானும் காரில் சென்று கொண்டிருந்தபோது, "திப்பு... இன்றைய இளம் பாடகர்களில் எனக்கு உங்களைத்தான் மிகவும் பிடிக்கும். உங்க பாடல்களைக் கேட்டிருக்கிறேன். அருமையாகப் பாடுகிறீர்கள்" என்றார். எப்பேர்ப்பட்ட பாடகர் அவர். அவரது வாயால் என்னைப் பாராட்டியதை எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். அவரது குரலில் ஒலித்த "பூங்காற்று திரும்புமா?" என்ற பாடல் காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கும்.
வினோத் சந்திரபோஸ்
(இசைமைப்பாளர் சந்திரபோஸ் மகன்)
என் தந்தையின் இசையில் பல ஹிட் பாடல்களைப் பாடியவர். எங்கள் குடும்பத்துக்கும் தந்தைக்கும் நெருக்கமான நண்பராக இருந்தார். என் தந்தை அண்மையில் காலமானபோது, மலேசியா வாசுதேவன் சாரும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அப்படிப்பட்ட நிலையிலும், நேரில் வந்து அப்பாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி எங்களுக்கும் ஆறுதல் கூறினார். இப்போதும் அவரும் மறைந்துவிட்டதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. என் தந்தையின் இசையில் அவர் பாடிய "மனிதன் மனிதன்" என்ற பாடல் அவருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் இசைப் பிரியர்களுக்கும் பிடித்தமான பாடல்.






No comments:
Post a Comment