இந்தி மொழியை கற்று வருகிறேன். அதில் நல்ல தேர்ச்சி அடைந்ததும் இந்திப் படங்களை இயக்குவேன், என்கிறார் இயக்குநர் பாலா.
தமிழ்ப் படைப்பாளிகளில் அதிகம் பேசாதவர், அரிதாகவே பேசுபவர் பாலா.
இதுவரை 4 படங்கள்தான் அவர் இயக்கத்தில் வெளிவந்துள்ளன. ஆனால் நான்கும் அரிதான படங்களே. விருதுகளைக் குவித்த படங்கள் அவை. தமிழ் சினிமாவின் தரத்தை வேறு தளத்துக்கு கொண்டு சென்றவை.
இப்போது அவன் இவன் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஆர்யா - விஷால் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படம் குறித்து மீடியாவுக்கு பேட்டிகள் தர ஆரம்பித்துள்ளார் பாலா. அவர் கூறுகையில், "அவன் இவன் ஒரு பொழுதுபோக்குப் படம். சிரிப்பும் அதிரடி ஆக்ஷனும் நிறைந்த கதை இது. ஆர்யா, விஷால் இருவருமே மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.
இருவருக்கும் சமமான முக்கியத்துவம் இந்தக் கதையில் தரப்பட்டுள்ளது. பொதுவாக என்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, படங்களைத் தாமதமாகத் தருகிறேன் என்பது. என்னை நம்பி என்னுடன் பணியாற்றும் அனைவரின் தரத்தையும் உயர்த்துவதாக எனது படம் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதனால்தான் இந்த தாமதம். ஆனால் இந்தப் படம் அந்தக் குற்றச்சாட்டை பொய்யாக்கிவிடும். இந்த கோடையில் படமே வெளியாகப் போகிறது.
இந்திப் படம் அல்லது வேறு மொழிப் படம் பண்ணச் சொல்லி கேட்கிறார்கள். எப்போதும் என்னை மட்டும் நம்புகிற ஆள் நான். அடுத்தவரை நம்பி, தெரியாத மொழியில் இறங்க மாட்டேன். உண்மையில் இப்போது நான் இந்தி கற்று வருகிறேன். எழுதப் படிக்க தெரியும். பேசத் தெரியாது. இந்த மூன்றிலும் நான் தேர்ச்சி பெற்றுவிட்டால், நிச்சயம் இந்திப் படம் இயக்குவேன்!", என்றார்.

No comments:
Post a Comment