வரும் சட்டசபை தேர்தல் முடிந்ததும் திமுக, அதிமுக கூட்டணிகள் நீடிக்காது என்று ஜனதா கட்சி்த் தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
வரும் சட்டசபை தேர்தலில் ஜனதா கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந் நிலையில் ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியலை சாமி வெளியிட்டார். அதன் விவரம்,
1. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி- எஸ்.வெங்கட்ராமன்
2. திருத்தணி- ஜே.பாபு
3. விழுப்புரம்- சி.ஆரோக்கியசாமி
4. காட்பாடி- ஏ.வரதராஜன்
5. நாமக்கல்- கே.பழனியப்பன்
6. ஸ்ரீரங்கம்- கே.ஏ.எஸ்.அறிவழகன்
7. மதுரை மத்திய தொகுதி- ஏ.சசிகுமார்
8. மதுரை தெற்கு- என்.எஸ்.ஆர்.சாந்தாராம்
9. மேலூர்- வி.தர்மலிங்கம்
10. குன்னூர்- எம்.ஆல்வாஸ்.
பின்னர் சுப்பிரமணிய சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜனதா கட்சி ஊழல் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளும்.
வரும் தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகள் பெரும் பின்னடைவை சந்திக்கும். ஊழலை மறைக்க திமுகவும், காங்கிரஸும் ஒன்று சேர்ந்துள்ளன.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்னும் சசிகலா குடும்பத்தினரின் பிடியில் தான் இருக்கிறார் என்பதை அவர் அவசர அவசரமாக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இருந்தே தெரிகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே மாதம் 13ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் புதிய சூழ்நிலை உருவாகும். தேர்தல் முடிந்த பிறகு திமுக, அதிமுக கூட்டணிகள் எல்லாம் நீடிக்காது. ஏனென்றால் அவை இரண்டுமே சந்தர்ப்பவாத கூட்டணிகள் என்றார்.

No comments:
Post a Comment