மதிமுகவிடம் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்திய அதிமுக, அதன்பிறகு அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கியதுபோக மீதமுள்ள 160 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக தலைமை அறிவித்தது.
இதையடுத்து அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்பதால், இன்று அவசர கூட்டத்தை கூட்டியுள்ளார் வைகோ.
இந்நிலையில் அதிமுக தரப்பில் இருந்து வைகோவிடம் சமரச பேச்சுவார்தை நடந்தது. மதிமுக தலைமையகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற செங்கோட்டையன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், வைகோவின் முடிவுகளை தெரிவிக்க போயஸ் கார்டன் சென்றுள்ளனர்.
இதற்கிடையில் நேற்று மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க., கூட்டணிக்கு ஜெயலலிதா அழைத்தாலும், இணைய மாட்டோம் என்றும், எங்களுக்கு புதிய வாசலை திறந்து விட்ட ஜெயலலிதாவுக்கு கோடி நன்றி என்றும், மற்றபடி அனைத்தும் கட்சியின் உயர்மட்டக் குழுவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முடிவு செய்வார் என்றும் கூறியிருந்தார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
No comments:
Post a Comment