சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழக காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சோனியாகாந்திக்கு 63 வேட்பாளர்கள் பட்டியல் தயாரித்து அனுப்பினார்.
தங்கபாலு கொடுத்த வேட்பாளர் பட்டியலை ஏற்க வேண்டாம் என்று ப.சிதம்பரம். ஜி.கே.வாசன் இருவரும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சிகாக உழைத்தவர்களூக்கு போட்டியிட வாய்ப்பு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கபாலு பட்டியலில் உள்ளவர்கள் பலர் மக்களுடன் தொடர்பு அற்றவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கையை ஏற்பதாக சோனியா உறுதியளித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் எம்.பிக்கள் 6 பேர் தங்கபாலு மீது சோனியாவிடம் நேற்று புகார் கூறியுள்ளனர்.
தங்கபாலு பட்டியலை ஏற்க சோனியா மறுத்ததால் வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment