அதிமுக - தேமுதிகவில் இழுபறி நீடிக்கிறது.
அதிமுக அணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் எவை என அடையாளம் காண அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி சனிக்கிழமை காலை வரை முதல் சுற்று பேச்சுவார்த்தை நடந்தது.
அதில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் தேமுதிக நிர்வாகிகள் ஜெயலிதா வீடு சென்றனர்.
ஞாயிறு அதிகாலை வரை இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. விடிய விடிய இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம், 41 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. தலைவர் விஜயகாந்த் ஒப்பதலுக்கு பிறகு மாலையில் தொகுதி பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
ஆனால் மாலை பட்டியல் வெளியிடப்படவில்லை. தேமுதிக அலுவலகமும் உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
அதிமுக ஓட்டுகள் அதிகம் இருக்கும் தொகுதிகளையே தேமுதிக குறிவைத்து கேட்கிறது. அதைத்தர அதிமுக மறுக்கிறது. தொகுதிகளைப் பெறுவதில் தேமுதிக உறுதியுடன் இருப்பதாகவும், ஆனால் விட்டுக்கொடுக்க அதிமுக மறுப்பதாலும் இழுபறி நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார்.
No comments:
Post a Comment