அ.தி.மு.க. கூட்டணியில் இரு கம்யூனிஸ்டுகள் மற்றும் சிறிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. தே.மு.தி.க.வுக்கும், ம.தி.மு.க.வுக்கும் மட்டுமே இன்னும் தொகுதிகள் இறுதி செய்யப்படாமல் உள்ளது. தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகள் குறித்து நேற்று இரவு ஜெயலலிதாவுடன் பண்ருட்டி ராமச்சந்திரனும், சுதீசும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது தே.மு.தி.க. போட்டியிட விரும்பும் தொகுதி பட்டியலை ஜெயலலிதாவிடம் கொடுத்தனர்.அடுத்த கட்டமாக ஜெயலலிதாவும், விஜயகாந்தும் சந்தித்து பேசி போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வது என முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து விஜயகாந்த் இன்று போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்து பேசுகிறார். அப்போது தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும், விஜயகாந்த்தும் கையெழுத்திடுகிறார்கள்.
அதன்பிறகு அ.தி.மு.க. போட்டியிடும் புதிய பட்டியல் வெளியாகும். ஏற்கனவே அறிவித்த பட்டியலில் இடம்பெற்றவர்களின் பெயர்கள் நீக்கப்படும். விஜயகாந்த்தும் தே.மு.தி.க. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவார்.
No comments:
Post a Comment