அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதில் சிக்கல் நீடிக்கிறது. நேற்று மாலை தொடங்கி இன்று காலை வரை நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்துள்ள அதிமுகவுக்கு தேமுதிகவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று இரவு தொடங்கிய பேச்சுவார்த்தை இன்று காலை வரை நீடித்தது.
அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை தேமுதிக அதிமுகவிடம் கொடுத்துள்ளது. அதில் சுமார் 25 தொகுதிகளை
தர அதிமுக முன்வந்துள்ளதாகவும், மீதமுள்ள 16 தொகுதிகள் தேமுதிக விரும்பாதது என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கட்சித் தலைவர் விஜயகாந்த், முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இன்று மாலை போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்து, தொகுதி பங்கீட்டுக்கான ஒப்பந்தத்தை பெறுவார் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment