அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும் திட்டவட்டமாகப் புலப்பட்டதற்குப் பிறகு, ஜெயலலிதா தலைமையிலான அணியில் இருப்பது நல்லதல்ல என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விலகிவிட்டார்.
அதுமட்டுமல்லாமல் தேர்தலையே புறக்கணிப்பதாக அறிவித்தார்.
இதையடுத்து ஜெயலலிதா, மதிமுக நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கும் உரிமை வைகோவுக்கு உள்ளது.
தேர்தலை புறக்கணிக்கும் மதிமுகவின் முடிவு எனக்கு மன வருத்தத்தை அளிக்கிறது. முடிவு எப்படி இருந்தாலும் அன்புச்சகோதரியின் அன்பும், நன்மதிப்பும் எப்போதும் இருக்கும்’’ என்று வைகோவுக்கு கடிதம் எழுதினார்.
இந்த கடிதம் கண்டு மதிமுகவினர் கொந்தளித்தனர். திட்டமிட்டு வெளியேற்றிவிட்டு இப்போது கடிதம் எழுதி நாடகம் ஆடுகிறாயா என்று தமிழகம் முழுவதிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதிமுகவின் சில மாவட்ட மாணவரணியினர் அதிமுகவை இந்த தேர்தலில் தோற்கடிக்க பாடுபடுவோம். அதற்காக தனி அமைத்து பிரச்சாரம் செய்யவேண்டும் என்று சபதம் ஏற்றுள்ளனர்.
கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் மல்லை சதயா, ‘’கழக பொதுச்செயலாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் ஜெயலலிதா. எங்களை வெளியேற்றிவிட்டு எவ்வளவு அக்கறை அவருக்கு. இப்படி அனுதாபப்பட்டு கடிதம் எழுதி ஊரை ஏமாற்றுகிறார் ஜெயலலிதா.
மதிமுகவினரிடம் அனுதாபத்தை தேடிக்கொள்ள பார்க்கிறார். மதிமுகவினர் அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறார். அது நடக்காது’’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
No comments:
Post a Comment