தி.மு.க. சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் க.அன்பழகன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவோடு தனது சொத்து விவரங்களையும் அவர் தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐ.ஓ.பி.) சென்னை கீழ்ப்பாக்கம் கிளையில் நிரந்தர டெபாசிட் மற்றும் வரி சேமிப்பு முதலீடு ஆகிய இனங்களில் மொத்தம் ரூ.28 லட்சத்து 55 ஆயிரத்து 232 முதலீடு. யு.டி.ஐ. மிïட்சுவல் நிதி, எச்.டி.எப்.சி. மிïட்சுவல் நிதி, சுந்தரம் பி.என்.பி. பரிபாஸ் மிïட்சுவல் நிதி ஆகியவற்றில் மொத்தம் ரூ.2 லட்சம் முதலீடு.
தேசிய சேமிப்பு பத்திரங்களில் ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் முதலீடு. ஐ.ஓ.பி. கீழ்ப்பாக்கம் கிளையில் சேமிப்பு கணக்கு, நிரந்தர டெபாசிட் மற்றும் என்.எஸ்.சி., எஸ்.சி.எஸ்.எஸ். முதலீடு ஆகியவை மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் மற்றும் ராயல்டி மூலமாக கிடைக்கும் தொகை ரூ.3 லட்சத்து 23 ஆயிரத்து 590.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தனக்கு எவ்விதமான அசையும் மற்றும் அசையா சொத்துகள் இல்லை என்று வேட்புமனுவின் பிரமாண பத்திரத்தில் அமைச்சர் க.அன்பழகன் குறிப்பிட்டுள்ளார். வங்கிக் கணக்கில் தனது பெயரில் ரூ.6 ஆயிரமும், மனைவி பெயரில் ரூ.1,500-ம் இருப்பதாக அந்த பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரெம்ப பாவம்ங்க ஒரு அமைச்சரா இருந்துகிட்டு இப்படி 'தனக்கு எவ்விதமான அசையும் மற்றும் அசையா சொத்துகள் இல்லை'ன்னு சொல்லுறாரு அது சரிங்க 'கார்' கூடவா இல்ல, வீடு கூடவா இல்லைங்க ...!!, (நான் ஒட்டு மொத்த தமிழக மக்களின் சார்பாகவும் கலைஞரை வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு அமைச்சரை அதுவும் உங்களுக்கு அடுத்த இடத்தில் மக்களால் வைத்து பார்க்கப்படும் தலைவரை இப்படியா வீடு கூட இல்லாமல் 'அம்போ' என்று விடுவது. 'கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில்'லாவது ஒரு வீடு கொடுத்திருக்கலாமே...?). நம்ம எல்லாம் பார்த்தா எப்படி இருக்குதாம் எவ்வளவு கொள்ளை எடிசாலும் கண்டுக்க மாட்டாங்க..!என்ன சொன்னாலும் நம்புவாங்க...!! ரெப்ப...ரெம்ப...நல்லவங்கன்னு நினசிட்டான்களா....!!!
இது தான் நமது இன்றைய நிலைமையா....?
வன்மையாக நானும் கண்டிக்கிறேன்...
ReplyDeleteஅன்பழகனை.