தான் குதிரைதான் என்று மறுபடியும் நிரூபித்திருக்கிறார் ரஜினி. அவரது உடல் நலக்குறைவை நீண்ட கால நோயாக்கிவிடுகிற அளவுக்கு வதந்திகள் றெக்கை கட்டி பறந்து வந்தது சில நாட்களாக. அதையெல்லாம் முறியடிக்கிற விதத்தில் வீடு திரும்பிவிட்டார் அவர்.
ரஜினி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டார் என்று வெறுமையாக அறிவித்திருந்தால் கூட அவர் ஆம்புலன்சில் வந்தாரா, படுத்த படுக்கையாக இருந்தாரா என்றெல்லாம் விவாதம் கிளம்பியிருக்கும். அதை உணராதவரல்ல அவர். அதனால்தான் நான் நன்றாக ஓடியாடி நடக்கிற நிலையில்தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்கிற விதத்தில் காளிகாம்பாள் கோவிலுக்கு வந்திறங்கினார். அங்கு பிரார்த்தனையை முடித்துக் கொண்டு அப்படியே திருவான்மியூரில் இருக்கும் பாம்பன் சுவாமிகள் கோவிலுக்கும் சென்றார். நேற்று நடந்த இந்த சம்பவம் பலரது வாயை இறுக மூட வைத்திருக்கிறது.
இன்னும் ஒரு மாதம் ஓய்விலிருப்பாராம் ரஜினி. இடையில் அமெரிக்கா செல்லவும் திட்டமிட்டிருப்பதாக தகவல். இங்கிருந்தால் நேரில் வரும் விவிஐபி களின் விசாரிப்புகளை தவிர்க்கவும் முடியாது. அப்படி வருகிறவர்கள் தும்மினால் கூட வந்தது வினை. அதனால்தான் இந்த ஏற்பாடாம்.

No comments:
Post a Comment