ரஜினி நடிக்கும் 'ராணா' படம் எப்போது பூஜை போடப்பட்டதோ அன்றில் இருந்து ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுவருவதால் 'ராணா' படம் கண்டிப்பாக கைவிடப்படும் என்று தகவல்கள் பரவின.
ஏற்கனவே இந்த தகவலை மறுத்தார் கே.எஸ்.ரவிக்குமார். மீண்டும் ரஜினி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் நேற்று மீண்டும் 'ராணா' படம் கண்டிப்பாக கைவிடப்படும் என்ற தகவல் பரவ ஆரம்பித்தன.
இதன் காரணமாக நேற்று கே.எஸ்.ரவிக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
"ரஜினி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் 'ராணா' படம் கைவிடப்பட்டிருப்பதாக வெளியாகிற தகவல்கள் வருத்தம் அளிக்கிறது. உடல் நலக்குறைவால் ஒருவர் பாதிக்கப்படுவது இயற்கை.
'ராணா' படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கனவுப்படம். அவரது சிந்தனையில் உதித்த படம். எனவே இந்தப்படத்தை வெற்றிகரமாக கொண்டு வருவதில் அவர் மிகுந்த ஆர்வமாக உள்ளார்.
ரஜினியின் உடல் நலக்குறைவு, இந்தப்படத்தின் படப்பிடிப்பு திட்டத்தில் ஆரம்பத்தில் ஒரு சிறிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அவர் உடல் நலம்பெற்று வருவதில் உறுதியாக உள்ளார். மேலும் ஜுலை மாதத்துக்கு பிறகுதான் தீபிகா படுகோன் கால்ஷீட் கொடுத்துள்ளார்.
எனவே இந்த படம் கைவிடப்பட்டுவிட்டதாக வருகிற தகவல்கள் தவறானவை. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான். சூப்பர் ஸ்டார் வேகமாக உடல் நலம்பெற்று வருகிறார். அடுத்த ஆண்டு 'ராணா' படத்தை வெளியிட்டு விட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். " என்று கூறிப்பிட்டு இருந்தது.

No comments:
Post a Comment