| நடிகர் அஜீத் நடித்து வெளிவர இருக்கும் 50வது திரைப்படம் 'மங்காத்தா'. மே 1-ம் தேதி படம் வெளியீடு என்று ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு தாமதமாகி, மே- 1 பாடல் வெளியீடு என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் இன்று தான் இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இன்று வெளிவரும் பாடல் சி.டியுடன் அஜீத் கையொப்பம் இட்ட ஒரு போஸ்டரும் அஜீத்தின் அறிக்கையும் இடம் பெற்று இருக்கிறது. அந்த அறிக்கையில் "யுவனுடன் மீண்டும் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் பணிபுரிந்த 'தீனா' மற்றும் 'பில்லா' ஆகிய படங்களின் பாடல்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது. அதைப் போலவே 'மங்காத்தா' படத்தின் பாடல்களும் வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன். எனக்கு 'மங்காத்தா' படத்தின் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் சந்தோஷமாக அமைந்தது. வெங்கட் பிரபு ஒரு அற்புதமான இயக்குனர். என்னுடன் இணைந்து பணியாற்றிய மிகச் சிறந்த இயக்குனர்களில் இவரும் ஒருவர். தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி மிகவும் உறுதுணையாக இருந்தார். எனது 50வது படம் வெளிவர இருக்கும் இந்த தருணத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், P.R.Oக்கள், விநியோகஸ்தர்கள், என் ரசிகர்கள், என் குடும்பத்தினர் என அனைவருக்கும் எனது நன்றி. எனது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒத்துழைப்பு மகத்தானது. எல்லோருக்கும் என் அன்பு வணக்கங்கள்" என்று அந்த அறிக்கையில் கூறிப்பிட்டு இருந்தது. இன்று வெளியான 'மங்காத்தா' போஸ்டர்களில் அஜீத் போலீஸ் உடை அணிந்து இருப்பது போல் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் வெங்கட் பிரபு " அஜீத் ஒரு காட்சியில் மட்டும் போலீஸ் உடை அணிந்து வருவார். மீதியை ஜுன் முதல் வாரம் திரையில் பார்த்து கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார். |
Friday, May 20, 2011
ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்தின் புதிய அறிக்கை
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment