கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு இன்று (25.08.2011) காலை கைது செய்யப்பட்டார். மேலும் திமுக முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, கோவை மாநகர திமுக நகர செயலாளர் வீரகோபால் உள்பட இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை கைது செய்யப்பட்டார். திருச்சியில் இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கே.என்.நேருவை திருச்சியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் போலீசார் வைத்தனர். கே.என்.நேருவை சந்திக்க அவரது வழக்கறிஞருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று திமுகவினர் கூறினர்.
இதேபோல் திமுக முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமியும் இன்று காலை கைது செய்யப்பட்டார். கோவை மாநகர திமுக நகர செயலாளர் வீரகோபால் உள்பட இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் திமுகவைச் சேர்ந்த மேலும் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரே நாளில் 11 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment