குற்றம் நடந்தது என்ன? என்கிற ரேஞ்சில் அமலா விஷயத்தை அணுகிக் கொண்டிருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். சமீபத்தில் தனுஷ் படத்திலிருந்து அவர் விலகியதற்கு பின்னணியில் நடந்த பிரச்சனையை சர்வ ஈசியாக வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள் சில சினிமாக்காரர்கள். அவர்கள் சொல்வது கதையல்ல, நிஜம் என்பதை கேட்கும் போதே உணர முடிகிறது நம்மால்.
ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் முதன் முதலில் நடிக்க சம்மதித்த ஸ்ருதிஹாசன் அதிலிருந்து திடீரென்று விலகிக் கொள்ள, அப்புறமாக உள்ளே நுழைந்தார் அமலா. திடீரென்று அவரும் இல்லை, மறுபடியும் ஸ்ருதியே நடிக்கிறார் என்றார்கள். ஏன் இந்த திடீர் திடீர் குட்டிக்கரணங்கள் என்று விசாரித்தால் உருப்படியான பதில் தேறவில்லை.
அதைதான் சற்று காலம் தாழ்ந்து சொல்கிறார்கள் இப்போது. இந்த படத்திற்காக முதலில் அமலாவுக்கு பேசப்பட்ட சம்பளம், பதினைந்து லட்சமாம். இவர் சம்பளத்தை அதிகப்படுத்தி கேட்ட போது கூட, ரஜினியின் மகள் இயக்கும் படம். உங்களுக்குதான் பேரும் புகழும் என்று எடுத்துச் சொல்லப்ட்டதாம். இதில் சற்றே முகம் வாடியிருந்த அமலாவுக்கு தெலுங்கிலிருந்து வந்த அழைப்பு புத்துணர்ச்சியை கொடுத்தது.
ஏனென்றால் அங்கு தருவதாக சொல்லப்பட்ட சம்பளம், இருபத்தைந்து லட்சம். எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அந்த சம்பளத்தை ஒப்புக் கொண்ட அமலா, தனது கால்ஷீட்டை சுளையாக அள்ளி அங்கு கொடுத்துவிட்டாராம். இப்போது சொல்லுங்கள் யார் புத்திசாலி?
No comments:
Post a Comment