விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Friday, November 18, 2011

    பார்த்திபன் - அமீர் விவகாரத்தில் நடந்தது என்ன? - பாரதிராஜா விளக்கம்


    அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் இளையராஜாவுடன் மீண்டும் இணையாதது ஏன் என்ற கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார் இயக்குநர் பாரதிராஜா.

    தேனி அல்லி நகரத்தில் தனது குல தெய்வமான வீரப்ப அய்யனார் கோயிலில் கிடா வெட்டி அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துக்கு பூஜைபோட்ட பாரதிராஜா, மாலையில் தேனி நகரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை என் படம் தொடர்பாகச் சந்திக்கிறேன்.

    இதுவரை தேனி அல்லிநகரம் பகுதியில் எந்த விழாவிலும் நான் பங்கேற்றதில்லை. தேனி மாவட்டத்தில் சின்னமனூர், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற விழாக்களில் பேசி இருக்கிறேன். ஆனால் 35 ஆண்டுகளில் என்னை என் பகுதி மக்களும், பள்ளித்தோழர்களும் வரவழைத்து விழா நடத்தவில்லை என்ற கோபம்தான் காரணம்.

    இப்போது இந்த படத் தொடக்க விழாவின் மூலம் நானே என்னை வரவழைத்துக் கொண்டேன். நான் இங்கிருந்து சினிமாத்துறைக்கு சென்று அங்கிருந்து சினிமாவை இங்கு கொண்டு வந்து இருக்கிறேன்.

    அன்னக்கொடியும் கொடி வீரனும் ஒரு மனிதனின் 60 ஆண்டுகால வாழ்க்கையைச் சொல்லும் படம். ஐம்பதுகளில் தொடங்கும் இந்தப் படம் இந்த சமகாலம் வரை நடந்த நிகழ்வுகளின் நெகிழ்ச்சியான பதிவு. இது எனது 49வது படம். இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஒரு பதிவாக இருக்கும்.

    இயக்குநர் அமீர் கட்டுவிரியன் என்ற முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு முக்கிய வேடத்தில் லட்சுமணன் என்ற இளைஞரை, என் நண்பனின் மகனை அறிமுகப்படுத்துகிறேன். சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத இளைஞன் அவன். அன்னக்கொடியாக, நான் அறிமுகப்படுத்திய ராதாவின் மகள் கார்த்திகா நடிக்கிறார். ராதா மகளை மட்டுமல்ல, கார்த்திகா மகளையும் இயக்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

    இன்னொரு முக்கிய வேடத்தில், மல்லாங்கிணறு மங்காதாத்தா என்ற பாத்திரத்தில் இனியா நடிக்கிறார். மீனாள், பாண்டி ஆகியோரும் முக்கிய வேடமேற்றுள்ளனர். மற்ற பாத்திரங்கள் குறித்து பின்னர் சொல்கிறேன்," என்றார்.

    பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

    குற்றப்பரம்பரை படத்தின் கதைதான் இந்த அன்னக்கொடியும் கொடிவீரனும் படக்கதையா?

    குற்றப்பரம்பரை கடந்த ஏழு ஆண்டுகளாக நான் சொல்லிவரும் படம். அந்தக் கதை பலரும் அறிந்தது. அதை எடுக்கத் தேவையான ஒவ்வொரு விஷயங்களாக சேகரித்து வருகிறேன். எனது அடுத்த படைப்பாக குற்றப்பரம்பரை வரும்.

    பார்த்திபன் - அமீர் விவகாரத்தில் நடந்தது என்ன?

    என்னடா இன்னும் கேக்கலையேன்னு பார்த்தேன். நீங்க நெனக்கிற மாதிரி எதுவும் நடக்கலை. பார்த்திபன் நல்ல நடிகர். மிக வித்தியாசமான சிந்தனைக்காரன். அவனது திறமைக்கு ஏற்ற உயரம் இன்னும் கிடைக்கவில்லை என்பேன். ஆனால் இந்தக் கதையைப் பொறுத்தவரை, இந்த மண்ணின் மைந்தனாக வாழ வேண்டும். பார்த்திபன் அதை செய்துவிடுவார்தான். ஆனால் அதற்கு முன்பயிற்சி தேவை.

    ஆனால் அமீரைப் பார்த்ததும், இந்த வேடத்துக்காகவே பிறந்தவன் மாதிரி தெரிந்தது. அதனால் அவரை தேர்வு செய்துவிட்டேன். குறுகிய காலத்தில் முடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு. எனவே பார்த்திபனுக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைக்காமல், அமீரையே நாயகனாக்கிவிட்டோம். இது பார்த்திபனுக்கும் தெரியும். நானே அவரிடம் பேசிவிட்டேன்.

    அமீரின் அர்ப்பணிப்பு உணர்வு, அந்தப் பாத்திரமாகவே மாறிப் போகும் தீவிரத்தன்மை எனக்கு பிடித்துவிட்டது. கருத்துவேறுபாடுகளைத் தாண்டி நாங்கள் இணைந்தது அதனால்தான்.

    நான் என்ன சொன்னாலும் அப்படியே செய்கிறார் அமீர். ஒரு நாள் அவரது உடல் அமைப்பையே இந்தப் படத்துக்காக வேறு ஷேப்புக்கு கொண்டு வர வேண்டும் என்றேன். அடுத்த இரண்டு நாட்களில் நான் பார்த்த அமீர், என் கதைக்கு தேவையான அளவு மாறியிருந்தார்.

    அதனால்தான் அமீரைத் தேர்வு செய்தேன்.

    உங்கள் பட ஹீரோக்கள் இருவருமே கறுப்பு நிறமுடையவர்கள். ஆனால் ஹீரோயின்கள் மட்டும் சிவப்பாக இருப்பது ஏன்?

    அது ஒண்ணுமில்லை... மேக்கப்தான். அதை கழுவிட்டா அவங்களும் ஒரே நிறம்தான்!

    இது பீரியட் படமா....

    அதெல்லாம் ஒண்ணுமில்லை. சும்மா அப்படி சொல்லி ஏமாற்ற விரும்பவில்லை. பீரியட் படம் என்றால் 400 வருஷத்துக்கு முந்தைய கதையாக இருக்க வேண்டும்.

    இது ஒரு 60 ஆண்டு கால வாழ்க்கைப் பதிவு. நான் வாழ்ந்த வாழும் காலத்திய நிகழ்வுகளைப் பதிவு செய்கிறேன். இது எப்படி பீரியட் படமாகும்?

    இளையராஜாவுடன் இந்தப் படத்தில் இணையாதது ஏன்?

    எத்தனை முறை இதற்கு பதில் சொல்வது... இந்தப் படத்தில் அவருடன் இணைவேன் என்று எப்போதாவது சொன்னேனா... ஒரு கட்டத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றினோம். அதன் பிறகு எனக்கு வேறு அனுபவங்கள் தேவைப்பட்டது. அதனால் ரஹ்மான், தேவா, ஜீவி பிரகாஷ் என மாறினேன். ஒவ்வொரு முறையும் புதுப்புது அனுபவங்கள் எனக்குக் கிடைத்தன. இன்னொன்று இதுபற்றி நானும் இளையராஜாவும் அல்லவா பேச வேண்டும்... மீடியா ஏன் பேசுகிறது!

    ஆனால் உங்கள் ரசிகர்களைப் பொறுத்தவரை இளையராஜா - பாரதிராஜா இணைந்தபோது வந்த பாடல்களின் தரம் வேறு படங்களில் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் இணைவார்களா என எதிர்ப்பார்க்கிறார்கள்... இந்தக் கேள்வி அடிக்கடி பிறக்கிறது...

    அதற்குக் காரணம், சின்ன வயதில் அந்தப் படங்களைப் பார்த்து பாடல்கள் கேட்டதால் வரும் உணர்வுதான். அந்தப் பாடல்கள் அப்படியே மனசுல பதிஞ்சு போச்சு ரசிகர்களுக்கு. ஏன்... நானும் ரஹ்மானும் இணைந்த கிழக்குச் சீமையிலே பாடல்கள் நன்றாக இல்லையா... கருத்தம்மா பாடல்கள் எப்படி...

    இன்னொன்று வெற்றிபெற்ற ஜோடி, பிரிந்த பிறகு மீண்டும் இணைந்தால் அதே வெற்றி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. எம்எஸ்வி பண்ணாத சாதனைகளா? ராமமூர்த்தியைப் பிரிந்த பிறகும் எம்எஸ்வி பெரிய வெற்றிகளைக் கொடுத்தார். ஆனால் மீண்டும் இணைந்தபிறகு அவர்களால் அந்த வெற்றியைத் தர முடிந்ததா?

    சின்ன வயதில் அம்மாவோடு நெருக்கமாக இருப்போம். பிரியமுடியாமல் ஒட்டிக் கொண்டே இருப்போம். ஆனால் வயது ஏற ஏற புதிய உறவுகளைத் தேடுவதில்லையா... அதுபோலத்தான்.

    இந்தப் படத்தின் மூலம் என்ன சொல்லப் போகிறீர்கள் இந்த சமூகத்துக்கு...

    இதுவரை நான் என்ன சொல்லியிருக்கிறேன்... அதேதான் இந்தப் படத்திலும்!

    -இவ்வாறு பாரதிராஜா பதிலளித்தார்.


    Posted by விழியே பேசு... at 1:57 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ▼  November (512)
      • எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் :நாளிதழ் அலுவ...
      • நடத்தையில் சந்தேகம்: நடிகைக்கு கத்திக்குத்து
      • மதுரையில் அழகிரியின் எம்.பி. அலுவலகம் பறிப்பு!
      • இளையராஜா வீட்டு துக்கம் ரஜினி விசாரிக்காதது ஏன்? :...
      • 2ஜி வழக்கு: ராசா மனதில் என்ன இருக்கிறது?
      • ரஜினி, அமிதாப், நீங்க ஓய்வு பெறலாமே! - நிருபர் கேள...
      • அஜீத் வந்தா கொண்டாட்டம் !
      • ' ACTION ' ஆரம்பம் ! : 'தாண்டவம்' விஜய்
      • கூடங்குளம்:அணு உலை ஆதரவாளர்களை கடலில் வெட்டி வீசுவ...
      • பாடலை வரிசைக்கிரமமாக எழுதத் தெரியாத...தனுஷை கிண்டல...
      • அழகிரி வீட்டில் தங்கி வழக்கை எதிர்கொள்ளும் கனிமொழி
      • மீண்டும் வருகிறார் தமன்னா...!
      • 'ராஜபாட்டை' தியேட்டர்களில் 'நண்பன்' !
      • சிம்புக்கு ஜோடி ஆ‌ண்ட்‌ரியா
      • முன்னாள் ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மகள் மரணம்
      • கொடநாடு பயணத்தை திடீர் என ரத்து செய்தார் ஜெ.
      • ஸ்ருதி இடத்தில் இலியானா! விலகினாரா!! விலக்கப்பட்டாரா?
      • அரசியல் வாரிசுகளின் பத்தாயிரம் கோடி!
      • விடுதலையானார் கனிமொழி-டிச. 3ம் தேதி சென்னை வருகிறார்
      • ஏன் இந்த கொலைவெறி : கேரள படைப்பாளிகள் மீது தமிழ் ...
      • 3 - படத்தின் புகைப்படங்கள்
      • 'தட்டாம்பூச்சி' மூலம் உளவு பார்க்கப் போகும் இந்தியா!
      • கொலைவெறி பாடலுக்கு மியூசிக் கம்போசிஷன் கூட தனுஷ் த...
      • மனைவியுடன் சினேகன் தொடர்பு வழக்கு: குழந்தை, தந்தைய...
      • பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடிக்கும் நாடகம்...
      • திமுகவின் கூத்து :கனிமொழிக்கு கொ.ப.செ செயலாளர் பதவி
      • வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சில ரகசியங்கள் உள...
      • மீண்டும் மன்னனாகும் சூப்பர் ஸ்டார்!
      • சிறுத்தை இயக்குனர் சிவா இயக்கத்தில் தல!
      • பாடலாசிரியர் சினேகனுடன் எந்த தொடர்பும் இல்லை
      • குறைந்தபட்ச மின் கட்டணம் வீடுகளுக்கு ரூ.40 லிருந்த...
      • அது போன மாசம்; இது இந்த மாசம்: சீமான் ( ஸ்பெஷல் வீ...
      • 'எக்ஸ்ட்ரா செக்ஸை' விரும்பும் இந்தியப் பெண்கள்!
      • சென்னையில் தியாகி கனிமொழிக்கு பிரமாண்ட வரவேற்பு ....
      • நான் ஏன் அப்படி சொன்னேன்... அஞ்சலி விஷயத்தில் ஜெய்
      • நயன்தாராவை ஜோடியாக்க பிரபல ஹீரோ முடிவு
      • 6 நிமிடத்தில் 'கொலை வெறி' பிறந்தது-தனுஷ்
      • ராணாவிலிருந்து விலகும் தீபிகா படுகோன்?
      • வேற்று கட்சியினரின் தாய் தந்தையரை இழிவாக பேசிய சீமான்
      • கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது.. சரத்குமாருக்கும்!
      • கனிமொழிக்கு இன்றாவது ஜாமீன் கிடைக்குமா?
      • சபரிமலையில் பரபரப்பு-ஆண் வேடத்தில் 18ம் படி ஏற முய...
      • ஒய் திஸ் கொலைவெறி டி' 3 படத்தில் ரஜினி
      • பாடல்களே இல்லாத அபாயம் படம்!
      • இணையதளத்தில் ஆபாச போட்டோ, வீடியோ வெளியிட்டால் 5 ஆண...
      • நிர்வாணமாக நடிக்க தயார்- லட்சுமி ராய்!!
      • ஒட்டுமொத்த தமிழினத்தின் தாகமும் தமிழீழம்தான்! - வி...
      • சமுத்திரகனியின் சாட்டை
      • கோச்சடையான் தொடங்க ரஜினியின் உடல்நலம் காரணமல்ல!! -...
      • ரீசார்ஜ் மோசடி: அனில் அம்பானி சொத்துக்களை பறிமுதல்...
      • இந்திய அரசுக்கு இலங்கை அரசு எவ்வளவோ தேவலை: விஜயகாந...
      • கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற...
      • சச்சின் சதம் மிஸ் குரங்கு கொரில்லாவாக மாறிவிட்டது:...
      • விஜய்யுடன் நடிக்க மறுத்தேனா? பிரியங்கா சோப்ரா பதில்!
      • ரஜினியை இயக்கப்போகும் செல்வராகவன் !
      • தைமாதம் திருமணத் தேதியை அறிவிப்போம்: பிரசன்னா!!
      • 'மயக்கம் என்ன' video songs
      • ஆங்கில படங்களுக்கு கிடைக்கும் தியேட்டர்கள் கூட கிட...
      • 'இரண்டாம் உலகம்' :அனுஷ்காவுக்கு சூப்பர் ரோல் !
      • நாசமா போயிருவீங்க! ஜெயலலிதா ஆட்சி பற்றி சீமான் ஆவ...
      • டேம் 999... தெரியாம நடிச்சிட்டேன்! - பம்மும் விமலா...
      • ' WHY THIS KOLAVERI DI 'க்கு போட்டியாக 'WHY THIS K...
      • அஞ்சலி அறிக்கை பின்னணியில் மறைந்திருக்கும் மர்மம் ?
      • விறுவிறுப்பான மும்பை டெஸ்ட் 'த்ரில்' டிரா!
      • சுல்தான் தி வாரியர், கோச்சடையானா! - கே எஸ் ரவிக்கு...
      • அஜீத் விஜய் போல சிம்பு தனுஷ்?
      • காமெடியில் இருந்து வில்லன் வேடத்துக்கு மாறிய விவேக்
      • கோச்சடையான் படத்தில் ரஜினி ஜோடி அனுஷ்கா?
      • நான் வாயை திறந்தால் பலர் ஜெயிலுக்கு போவார்கள்; ஆ.ர...
      • ஜெயலலிதாவை விமர்சிப்பதா.. விஜயகாந்த் மீது சரத்குமா...
      • ரஜினியின் 'கோச்சடையன்' யார்?(வலைதளத்தில் முதல் முற...
      • டேம் 999க்கு நான் ஆதரவு தெரிவித்தேனா?: நயன்தாரா மற...
      • "மங்காத்தா'னா தான் பிரச்னை "ரம்மி'னா கண்டுக்காதீங்...
      • ‘டேம் 999’ திருட்டு சிடி விபரீதம்! : திடுக்கிடும் ...
      • பவாரை தாக்கிய வாலிபர் ஆவேசம் மீண்டும் வந்து அடிப்பேன்
      • அதிமுக பிரமுகரின் காதை கடித்த தேமுதிக செயலாளர் கைது
      • தமிழ்நாடு சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா?
      • சந்திரபாபு வாழ்க்கையை படமாக எடுத்து வெற்றி பெற்றேன...
      • ஒரே ஒரு அரிசி 1000 ரூபாய்! : திண்டுக்கல் பரபரப்பு
      • 'கொலவெறி' பாடலுக்கு பிரபலங்களின் பாராட்டுகளில் சி...
      • நீதிபதியின் கேள்வியும் ஜெயலலிதாவின் அண்டபுழுகு பதி...
      • 'ஏழாம் அறிவு' JOHNY TRI NGUYEN வில்லனானது எப்படி ?
      • விவாகரத்து தீர்ப்பின் போது இணைந்த தம்பதிகள்: தமிழ...
      • தலை சுற்றவைக்கும் மின்வாரியத்தின் உத்தேச கட்டண விபரம்
      • 'புரட்சித் தலைவி' ஆட்சியா, இல்லை ஹிட்லர் ஆட்சியா?:...
      • சிம்புவுக்கு வந்த சிக்கல்; ஒஸ்தி படம் தலைப்பு மாற்...
      • 'கொலைவெறி..'படலை தொடர்ந்து 2வது பாடலும் வெளியானது
      • ஸ்ரீபெரும்புதூரில் சீரடி சாய்பாபா படத்தில் இருந்து...
      • வீட்டில் அடைத்து மாதக்கணக்கில் சீரழித்தனர்: எம்.எல...
      • மும்பை டெஸ்ட் - தமிழக வீரர் அஸ்வின் அபார சதம் - இந...
      • 'விக்ரம் நடிக்கும் கரிகாலன் என் கதை' - டிவி இசையமை...
      • டெல்லியிலேயே சட்டம்- ஒழுங்கு குலைந்துள்ளது நல்லதல்...
      • சரத்பவாருக்கு ஒரு அடி போதாது என்று நான் கூறினேனா?;...
      • மார்ச் மாதம் முதல் 'ஷாக்' அடிக்கும்!-மின் கட்டணம்
      • கள்ள உறவு: அதிமுக ஆதரவு கவிஞர் சினேகன் கைது செய்யப...
      • 'கஜினி'யை வெல்வாரா சச்சின் டெண்டுல்கர்?
      • பாலா படம் மிரள வைக்கும் ! : விஷால்
      • திகார் சிறையிலிருந்து வெளியே வருவாரா கனிமொழி?
      • விளம்பரமே வெற்றிக்கு காரணம் !
      • இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்: அந்த பால் விக்கிற ...
      • 'மயக்கம் என்ன' : ரஜினி பாராட்டு !
      • தீபிகா படுகோனே, கத்ரினா கைப்பை ஆபாசமாக சித்தரிக்கு...
      • ஜெமினிகணேசனின் மகள் கமலா செல்வராஜ் ஆஸ்பத்திரி- வீட...
      • கந்துவட்டி கேட்டு மிரட்டல்: நடிகர் மன்சூர்அலிகான் ...
      • ஒரே, ஒரு அடிதானா..? என்று கேட்டுவிட்டு பவார் மீதான...
      • அமைச்சர் சரத் பவார் கன்னத்தில் பளார் விட்ட இளைஞர் ...
      • தில்லானா மோகனாம்பாள் காணக்கிடைக்காத ஷுட்டிங் ஸ்பாட்
      • வேட்டியை மடித்துக் கட்டப் போகிறேன், சிறைகளை நிரப்ப...
      • வொய் திஸ் கொலவெறி... யார் இந்த அனிருத்?
      • ராணாவுக்கு முன் ரஜினி நடிக்கும் கோச்சடையான்
      • கனிமொழி ஜாமீனுக்குப் பின் மத்திய அமைச்சரவையில் மாற...
      • பத்திரிக்கையாளர்களை ஆபாசமாக பேசிய வழக்கு- சூர்யா, ...
      • அப்ப 'பகலவன்' ?
      • தமிழில் ராணா !
      • விஜய்யின் 'துப்பாக்கி'... ஏ ஆர் முருகதாஸ் சம்பளம்...
      • 'கொலவெறி' பாடலுக்கு அமிதாப் வாழ்த்து!
      • நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி!
      • விஜய்-முருகதாஸ் சம்பள பிரச்சனை!
      • படத்தை திரையிட்டு காட்ட தயார்: டேம் 999 படக்குழு அ...
      • இன்றைய உண்ணாவிரதத்தில் அதிமுகவை விமர்சித்துப் பேசு...
      • ரஜினிக்கு கார் பரிசளிப்பதாக வதந்தி பரப்புவதா? ஷாரு...
      • ஐஸ்வர்யாராய் குழந்தைக்கு விரைவில் பெயர்சூட்டு விழா...
      • "சில்க் சுமிதாவைப்போலவே இருக்கிறார்'' - விஜய்யின் ...
      • துரைமுருகன் வீட்டில் ரெய்டு
      • விஸ்வரூபம் படத்தில் 40 ஆப்கானிஸ்தானியர்கள்!
      • பசுபதியின் நம்பர் 66 மதுரை பஸ்
      • 18 வயசு: மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவனின் காதல் கதை
      • 2 நடிகர்கள், பெண்ணுடன் கைது
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.