கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களைப் பிடித்துச் சென்று 20 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் "இயற்கை ஆதாரங்கள் பாதுகாப்பு'' என்ற தலைப்பில் ஐ.நா.சபை மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இலங்கை அதிபர் ராஜபக்சே இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
இலங்கைக்கு அருகில் வடக்கில் உள்ள அண்டை நாட்டு மீனவர்கள் வேண்டும் என்றே இலங்கை கடல் பகுதிக்குள் வருகிறார்கள். இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தி சிறு மீன் குஞ்சுகளைக் கூடப் பிடித்து மீன்வளத்தை அள்ளிச் செல்கிறார்கள். மேலும் அவர்கள் பாக் ஜலசந்தியில் உள்ள கடல் வளங்களையெல்லாம் கொள்ளையடிக்கிறார்கள். அதனால் கடல் வளத்தை காக்க பாக் ஜலசந்தியை பிரச்சனைக்குரிய பகுதியாக அறிவிக்க வேண்டும்.
இலங்கை கடற்பரப்பில் வந்து மீன் பிடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிறகு பேச்சுவார்த்தை நடத்தி விடுவிக்கப்படுகிறார்கள். பாக் ஜலசந்தியில் உள்ள கடல் வளம் எங்களுக்கே சொந்தம். எனவே இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைபவர்கள் மீது சர்வதேச கடல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.
அவர் அண்டை நாடு என்று குறிப்பிடுவது இந்தியாவைத் தான். அண்டை நாட்டு மீனவர்கள் என்று அவர் பேசியது தமிழக மீனவர்களைப் பற்றித் தான். இனி இலங்கையிடம் தமிழக மீனவர்கள் சிக்கினாலே 20 ஆண்டுகள் சிறை தண்டனை தான் என்பதை அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை தாக்குவது, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டியடிப்பது, கடத்திச் செல்வது என்று இலங்கை கடற்படை செய்யும் அட்டூழியங்களைப் பற்றி அவருக்கு
No comments:
Post a Comment