ஆந்திரா மாநிலத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 18 தொகுதிகளிலும் மனு தாக்கல் முடிந்து தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் வேட்பாளர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ள விவரங்களை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அப்போது ராய்துர்க் சட்டசபை தொகுதியில் போட்டியிட மனு செய்துள்ள தெலுங்கு தேசம் வேட்பாளர் தீபக் ரெட்டியின் மனு அவர்களை ஆச்சரியப்படுத்தியது.
அந்த மனுவில் தீபக் ரெட்டி தனக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆந்திராவில் இதுவரை யாரும் இந்த அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிடவில்லை.
39 வயதாகும் தீபக்ரெட்டி பிசினஸ் மேனேஜ்மெண்ட் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர் தனக்கு சொந்தமாக பல்வேறு கனிம சுரங்கங்கள் இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். அனந்தப்பூர் மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரான பிரபாகர் ரெட்டிக்கு இவர் மருமகன் ஆவார்.
இவரது உறவினர்கள் அனைவரும் காங்கிரஸ், பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சிகளில் செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளனர். தீபக்ரெட்டி மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன. அந்த வழக்கு விசாரணையை நடத்தக் கூடாது என்று தீபக்ரெட்டி ஐகோர்ட்டில் தடை வாங்கியுள்ளார்.
அவர் தனக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக கூறி இருப்பது பற்றி வருமான வரித்துறையினர் விசாரிக்க தேர்தல் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
No comments:
Post a Comment