முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் புதிய துப்பு துலங்கி இருப்பதாகவும் கொலையாளிகளை போலீசார் நெருங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது..
ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு 2 மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால் கொலைக்கான காரணம், யார் கொலையாளிகள் என்பது இன்னமும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சாகவே இருந்து வந்தது.
தற்போது புதிய ஆணையராக பொறுப்பேற்ற அமல்ராஜூம் இந்த வழக்கு விசாரணையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கெனவே அமைக்கப்பட்ட 7 தனிப்படைகளையும் அதிரடியாகக் கலைத்து புதிய தனிப்படை அமைத்தார்.
கடந்த 2 வாரங்களாக நடத்தப்பட்ட விசாரணையில் ராமஜெயத்துடன் நெருங்கிய தொடர்புடைய நபர் மீது போலீசாரின் சந்தேகப் பார்வை கிடுக்குப்பிடியாக இறுதியிருக்கிறது. உரிய ஆதாரங்கள் கிடைத்தால் அந்த நபர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம்.
இதனிடையே ராமஜெயம் கொலையானது முதல் தாடி வளர்த்து வந்த அவரது அண்ணன் நேரு திடீரென மொட்டை அடித்து தாடியை எடுத்த நிலையில் கடந்த சில நாட்களாக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அனேகமாக கொலையாளிகளை போலீசார் நெருங்கிவிட்டிருக்கலாம் என்ற உறுதியான தகவல் கிடைத்திருக்கும் நிலையிலெயே நேரு மொட்டை அடித்திருக்கக் கூடும் என்றும் திமுகவினர் கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் ராமஜெயம் கொலையாளிகள் போலீசிடம் சிக்கி விட்ட்டதாகவும் அவர்கள் போலீசார் கஸ்டடியில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமஜெயம் கொலை வழக்கில் ஓரிரு நாட்களில் திருப்பங்களை எதிர்பார்க்கலாம் என்றே கூறப்படுகிறது.
வருகின்றது வாட்டர் புரூப் ஆண்டிராய்ட் தொலைபேசி - http://mytamilpeople.blogspot.in/2012/06/xperia-acro-s-waterproof-phones.html
ReplyDeleteஒண்ணுமட்டும் உண்மை-கத்தி எடுத்தவன் கத்தியாலதான் சாவான் என்பது உண்மை
ReplyDelete