ஸ்பெக்ட்ரம் வழக்கில் கடந்த 15 மாதத்திற்கும் மேலாக திகார் சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவுக்கு சி.பி.ஐ., கோர்ட் ஜாமின் வழங்கியது. இருப்பினும் தமிழகத்திற்கு செல்ல அனுமதி கிடைக்க வில்லை.
இந்நிலையில் வரும் 30 ம் தேதி வரை தமிழகத்திற்கு சென்று வர சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட் அனுமதி வழங்கியது. இதையடுத்து இன்று அவர் தமிழகத்திற்கு வந்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் அவருக்கு தி.மு.க., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து திமுக தலைவர் கலைஞரை, அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார் ஆ.ராசா. அறிவால யத்தில் தம்மை சந்தித்த ராசாவுக்கு மாலை அணிவித்து கலைஞர் வாழ்த்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment